20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் கலக்கும் " "மருதாணி" பாடல்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்த

பக்கா கிராமத்து கதை களத்தில் வெளியான இந்த படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்க ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்

இந்நிலையில் இதில் கல்யாண பாடலாக இடம் பெற்ற மருதாணி பாடல் இப்பொழுது யூட்யூப் தளத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் கலக்குகிறது.

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தொடர்ந்து அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்த திரைப்படம் அண்ணாத்த. சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டது.

நீண்ட இடைவேளைக்குப்பிறகு கிராமத்து

நீண்ட இடைவேளைக்குப்பிறகு கிராமத்து

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப்பிறகு கிராமத்து கதை களத்தில் அதே துள்ளலோடு நடித்து அசத்தியுள்ளார் ஒவ்வொரு காட்சியிலும் பார்க்கும் அனைவரையும் ரஜினிகாந்தின் நடிப்பு கவருகிறது.

அண்ணன் தங்கை பாசத்தை

அண்ணன் தங்கை பாசத்தை

இவரை ஹீரோயினியாக பல படங்களிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் சில படங்களிலும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார் பொதுவாக முன்னணி கதாநாயகிகள் யாரும் அவ்வளவு எளிதில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள் ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரஜினிகாந்த் படத்தில் தங்கையாக நடித்து பிரமாதப்படுத்தி இருப்பார் இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

20 மில்லியன் பார்வையாளர்கள்

20 மில்லியன் பார்வையாளர்கள்

நயன்தாரா, குஷ்பு ,மீனா,கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது. இதில் கல்யாண பாடலாக மருதாணி என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. திருமணக் கோலத்தில் கீர்த்தி சுரேஷ் இருக்க அண்ணனாக ரஜினிகாந்த் அவளது கல்யாணத்தை கொண்டாடும் பாடலாக இடம் பெற்ற மருதாணி பாடல் அனைவரையும் கவர்ந்தது கேட்கவும் இனிமையாக இருந்தது. இந்த நிலையில் மருதாணி பாடல் இப்பொழுது யூட்யூப் தளத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X