»   »  'முடிஞ்சா இவன புடி' கே.எஸ்.ரவிக்குமாருக்காக ஒன்றிணைந்த தனுஷ்-சிவகார்த்திகேயன்!

'முடிஞ்சா இவன புடி' கே.எஸ்.ரவிக்குமாருக்காக ஒன்றிணைந்த தனுஷ்-சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'முடிஞ்சா இவன புடி' படத்தின் பாடல்களை விஜய் சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொள்கிறார்.

சுதீப், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'முடிஞ்சா இவன புடி'. தமிழ், கன்னடம் என 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு வருகின்ற 20 ம் தேதி நடைபெறுகிறது. முதலில் கமல்ஹாசன் இப்படத்தின் பாடல்களை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

Mudinja Ivana Pudi Audio Release

ஆனால் சில நாட்களுக்கு முன் மாடிப்படியில் தவறி விழுந்த கமல்ஹாசன் தற்போது அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் இப்படத்தின் பாடல்களை அவரால் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ் தலைமையில் விஜய் சேதுபதி பாடல்களை வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொள்கிறார். இதன் மூலம் தனுஷ்-சிவகார்த்திகேயன் இருவரும் நீட்களுக்குப் பின் ஒரே மேடையில் தோன்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathy launches Mudinja Ivana Pudi Audio on Coming 20th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil