»   »  2017-ன் நம்பர் 1 ஆல்பம்... சோனி மியூசிக் அறிவித்த ரஹ்மான் படம் எது தெரியுமா?

2017-ன் நம்பர் 1 ஆல்பம்... சோனி மியூசிக் அறிவித்த ரஹ்மான் படம் எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 2017-ம் வருடத்தின் சிறந்த ஆல்பம் எது என்ற தகவலை சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல பெரிய படங்களின் பாடல்களை வாங்கியுள்ள இந்த நிறுவனம் விஜய் நடித்த மெர்சல் படத்தினையும் வாங்கி இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'மெர்சல்' ஆல்பம் தான் கடந்த வருடத்தில் நம்பர் 1 ஆல்பம் என சோனி மியூசிக் நிறுவனம்தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'இன்று நேற்று நாளை' என்ற பெயரில் நேற்று நடத்திய இசை விழாவில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வந்தபோது ரசிகர்கள் மத்தியில் மெர்சலான வரவேற்பு கிடைத்தது.

பாடல் செம ஹிட்

'ஆளப்போறான் தமிழன்' பாடல் உலகம் முழுவதும் இவ்வளவு பிரம்மாண்ட ஹிட் ஆனதற்கு காரணமான தளபதி விஜய்க்கு ரஹ்மான் மேடையிலேயே நன்றி கூறினார். விஜய் ரசிகர்கள் பலத்த கைதட்டலோடு நன்றியை வெளிப்படுத்தினர்.

நம்பர் 1 ஆல்பம்

நம்பர் 1 ஆல்பம்

கடந்த வருடத்தின் நம்பர் 1 ஆல்பமான 'மெர்சல்' திரைப்படத்திற்கு இசையமைத்ததற்கான விருது சென்னை YMCA-வில் நேற்று நடந்த கான்சென்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

மெர்சல் ஹிட்

மெர்சல் ஹிட்

'மெர்சல்' பாடல்கள் ஒவ்வொன்றும் வெளியானது முதல் செம ட்ரெண்டாகின. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய்யின் திரைப் பயணத்தில் 25-வது வருடம் இருவரும் இணைந்த மெர்சல் ஆல்பம் மெர்சல் ஹிட் அடித்ததால் ரசிகர்கள் உற்சாக கொண்டாடி வருகிறார்கள்.

English summary
Sony Music Company has announced that, 'Mersal' is the No.1 album of 2017. Sony Music reported that last year's No.1 album was 'Mersal' composed by A.R. Rahman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X