»   »  ஓவியா- சிம்புவின் நியூ இயர் சர்ப்ரைஸ்! - 'மரண மட்ட' பாடல் இதோ!

ஓவியா- சிம்புவின் நியூ இயர் சர்ப்ரைஸ்! - 'மரண மட்ட' பாடல் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை ஓவியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் தமிழ் ரசிகர்களை தன் இயல்பான குணத்தால் கவர்ந்தவர்.

நேற்று சிம்பு, மிர்ச்சி விஜய் ஆகியோருடன் ஓவியா இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இதனால், சிம்புவுடன் ஓவியா படத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரு பாடலா என்ற சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சுக்கள் அடிபட்டது.

இப்போது, புதிய நியூ இயர் பாடலொன்றை ஓவியா பாட, சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஹேப்பி நியூ இயர் 2018

அந்த வகையில் தற்போது இந்த புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் 'மரண மட்ட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை ஓவியா பாட சிம்பு இசைமைத்துள்ளார். சிம்பு, ஹரிஷ் ஆகியோரும் ஓவியாவுடன் இணைந்து பாடியுள்ளனர்.

மரண மட்ட

மரண மட்ட

இந்த பாடலை வீடியோ வடிவமாக ரசிகர்களுக்கு நியூ இயர் சப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்துள்ளனர். இந்தப் பாடலில் ஓவியாவின் கியூட்டான ரியாக்‌ஷன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது.

சிம்பு இசையமைக்கும் படம்

சிம்பு இசையமைக்கும் படம்

மேலும் இந்த பாடலின் வரிகளை சிம்புவும், மிர்ச்சி விஜய்யும் இணைந்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் அனிதா உதீப் இயக்கும் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஓவியா ஆர்மி ஹேப்பி

ஓவியா ஆர்மி ஹேப்பி

'நியூ இயரு நைட்டு... ஆகலாமா டைட்டு...' என ஓவியாவின் குரலில் தெறிக்கும் இந்தப் பாடல் இளைஞர்களின் மொபைலில் இனி நியூ இயர் பாடலாக ஒலிக்கப்போகிறது. ஓவியா ஆர்மியினர் இந்தப் பாடலால் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆஃப்டர் சரக்கு

இந்தப் பாடலுக்குப் பிறகு 'ஆஃப்டர் சரக்கு '#DesiKuthu என்கிற பெயரில் இன்னொரு பாடல் ஒன்றும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலையும் ஓவியாவே பாடியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Marana matta - Happy new year song sings by Oviya, Simby and harish is released. This song was composed by Simbu for a untitled film. Simbu and mirchi vijay penned lyrics for this song. 'Marana matta' song goes viral among Oviya army.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X