»   »  கமலின் உத்தம வில்லன் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பார்த்திபன்!

கமலின் உத்தம வில்லன் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பார்த்திபன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் உத்தம வில்லன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் மார்ச் 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடக்கிறது.

விழாவுக்கான அழைப்பிதழ்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகையர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பார்த்திபன்

பார்த்திபன்

இந்த விழாவை பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்குகிறார். அதனை அவரே அறிவித்தும் உள்ளார்.

ஆலோசனை

ஆலோசனை

விழாவை எப்படி தொகுத்து வழங்க வேண்டும் என்பது குறித்து நேற்று கமலுடன் அவர் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினாராம்.

கமலஹாசனே விரும்பி பார்த்திபனை அழைத்து, இந்த ஆடியோ வெளியீட்டை தொகுத்து வழங்கக் கேட்டுக் கொண்டாராம்.

நடனங்கள்

நடனங்கள்

இந்த விழாவில் ஆட்டக்களறி என்னும் நடனமும், நடிகைகள் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோரின் நடனமும் பாடலும் இடம்பெறவிருக்கிறது.

பாலச்சந்தர்

பாலச்சந்தர்

‘உத்தம வில்லன்' படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். நாசர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 2

ஏப்ரல் 2

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வருகிறது.

English summary
Parthiban is going to anchoring the audio launch of Kamal's Uthama Villain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil