»   »  சிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு... சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்பு

சிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு... சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரஜினியின் கபாலி பட இசை வெளியீடு, மிக எளிமையாக நேற்று மாலை நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சி ஒரு அடையாள நிகழ்ச்சிதான் என்றும், ஞாயிற்றுக் கிழமைதான் (இன்று) மக்களுக்கு கபாலி படப் பாடல்கள் கேட்கக் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.


Rajinikanth's Kabali audio launched

சத்யம் சினிமா வளாகத்தில் நடந்த எளிய இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் மகள் சௌந்தர்யா கலந்து கொண்டு முதல் சிடியைப் பெற்றுக் கொண்டார். கபாலி படம் உருவாக முக்கிய காரணமே சௌந்தர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.


தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட படக்குழுவினர் மட்டும் கலந்து கொண்டனர்.


பிரமாண்ட விழா ஏதுமில்லாமல் சாதாரணமாக இசை வெளியீட்டு விழாவை நடத்துங்கள், வெற்றி விழாவில் ரசிகர்களைச் சந்திக்கலாம் என ரஜினி கூறிவிட்டதாலேயே கபாலி விழா எளிமையாக முடிந்துவிட்டது என்று தாணு தெரிவித்தார்.

English summary
The audio launch of much expected Kabali was held simply at Sathyam campus.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil