»   »  தெறி பாடல்கள் வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

தெறி பாடல்கள் வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்தின் இசை - பாடல்கள் வெளியீடு எப்போது என காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்து. இதோ அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

வரும் மார்ச் 20 -ம் தேதி படத்தின் இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.


Theri audio launch date announced

தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம்.


இந்தப் படம் விஜய்யின் ஆக்ஷன் படங்களில் முதலிடத்தைப் பிடிக்கும் எனும் அளவுக்கு மிகக் கச்சிதமாக வந்துள்ளதாம். படத்தைப் பார்த்த விஜய்யும், அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.


இந்நிலையில் தெறி படத்தின் பாடல்கள் வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 20-ம் தேதி பாடல்கள் வெளியிடப்படுகின்றன. படம், ஏப்ரல் 14 ம் தேதி சித்திரைப் புத்தாண்டு விருந்தாக வெளிவருகிறது.

English summary
Vijay's much expected Theri audio will be released on March 20th in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil