»   »  பட்டையைக் கிளப்பும் 'பைரவா' பாடல்...

பட்டையைக் கிளப்பும் 'பைரவா' பாடல்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் வரும் பட்டையக் கெளப்பு பாடல் வரிகள கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பரதன் படத்தில் வரும் பட்டையக் கெளப்பு பாடலை கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Vairamuthu reveals the lines of Pattaya Kelappu Bairavaa song

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பாடல் இதோ,

புகழ்மிக்க விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியிடப்படலாம். ரசிகர்களுக்கு வரிகளை முதலில் வாசிக்கத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். பாடலும் படமும் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு

குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு

கட்டுக் கட்டா - சேத்த
நோட்டுக் கட்டு - பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல - அது
பட்டினியா கெடக்கு?

**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு

ஓ... கடலில் ரயிலும் போகும்
காசை எடு

இமயம்
கொஞ்சம் குனியும்
காசை எடு

பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? ... ஓ
அள்ளிக் கொடு - இல்ல
ஆட்டம் போடு

சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு

கட்டு கட்டாச் - சேத்த
நோட்டுக் கட்டு - பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம் - ஒரு
வங்கி இல்ல - அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே

எதிரி வந்தால்
மோதிப் பாக்கணுமே

ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே


நீதி கேட்டு - தம்பி
நீயே நில்லு

தப்பாதப்பா
விஜயன் வில்லு

ரெண்டாயிரம் - ஆண்டா
வாழப்போற? - சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?

பறவைக் கெல்லாம் - ஒரு
வங்கி இல்ல - அது
பட்டினியா கெடக்கு?

English summary
Lyricist Vairamuthu has released the lines of Pattaya Kelappu song from Vijay's upcoming movie Bairavaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil