»   »  பைரவா பாடல்கள் டிச. 20ம் தேதி ரிலீஸ்...? #Bairavaa

பைரவா பாடல்கள் டிச. 20ம் தேதி ரிலீஸ்...? #Bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் எளிமையாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். டிசம்பர் 20ம் தேதி ஆடியோ ரிலீஸாகவுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய்.

Vijay's way of showing respect to Amma

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதால் தமிழக மக்கள் கவலையில் உள்ளனர். மாநிலமே துக்கத்தில் இருக்கும்போது இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினால் நன்றாக இருக்காது என்று விஜய் கருதுகிறாராம்.

இதையடுத்து இசை வெளியீட்டு விழாவை மிகவும் எளிமையாக நடத்த உள்ளார்களாம். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேசமயம், பிரபல திரைப்பட செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார்., அதில் ராம் சினிமா தியேட்டரில் டிசம்பர் 20ம் தேதி ஆடியோ ரிலீஸ் பெரிய அளவில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை.

English summary
Vijay has reportedly decidd to have a soft audio launch of Bairavaa as the whole TN is mourning the loss of former CM Jayalalithaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil