துபாய் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறார் யுவன் சங்கர் ராஜா.. லைவ் இசை நிகழ்ச்சி எப்போ தெரியுமா?

சென்னை: துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியை நடத்தப் போகும் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

துபாயில் பிரம்மாண்ட எக்ஸ்போ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா தனது இசை நிகழ்ச்சியை நடத்தப் போகும் தேதியை அறிவித்து இருக்கிறார்.

துபாயில் யுவன்

துபாயில் யுவன்

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட ஏராளமான தமிழ் இசையமைப்பாளர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று தங்களின் இசை கச்சேரிகளை ரசிகர்களுக்காக லைவ்வாக நடத்தி வருகின்றனர். துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா தனது இசைக் கச்சேரியை நடத்துவதற்காக தற்போது அங்கே முகாமிட்டு இருக்கிறார்.

கச்சேரி எப்போது

கச்சேரி எப்போது

வரும் மார்ச் 20ம் தேதி துபாயில் உள்ள ஜூபிளி பார்க்கில் இரவு 8.30 மணிக்கு மேல் தனது இசை கச்சேரி லைவாக ரசிகர்களுக்காக நடைபெறும் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். துபாய் ரசிகர்கள் இந்த அரிய வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள் என்பது கமெண்ட் பக்கத்தை பார்த்தாலே தெரிகிறது.

நீங்கள் சொல்லும் பாடல்கள்

நீங்கள் சொல்லும் பாடல்கள்

மேலும், யுவன் சங்கர் ராஜா அந்த நிகழ்ச்சியில் என்ன என்ன பாடல்களை பாட வேண்டும் என்பதை ரசிகர்கள் தெரிவிக்கலாம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏராளமான யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களும் ரசிகைகளும், யுவன் சங்கர் ராஜாவின் காதல் பாடல்களை வரிசைப்படுத்தி கமெண்ட் பக்கத்தில் போட்டு வருகின்றனர்.

ஆல்பம் பாடல்களில் பிசி

ஆல்பம் பாடல்களில் பிசி

வலிமை படத்தின் இசை தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் காரணமாக ஏகே 61 மற்றும் ஏகே 62 என இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில், சமீபத்தில் கேண்டி எனும் ஆல்பம் வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டு இருந்தார்.

Recommended Video

25 Years of Yuvanism | Yuvan Shankar Raja Press Meet Chennai |OneIndia Tamil
ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

விஜய்சேதுபதியின் மாமனிதன், தனுஷின் நானே வருவேன், கார்த்தியின் விருமன், சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், மேலும், எரியும் கண்ணாடி, குருதி ஆட்டம், இறைவன் மிகப்பெரியவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X