twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத்திய அரசின் சேவை வரிக்கு சினிமா துறையினர் எதிர்ப்பு!

    By Sudha
    |

    சென்னை: ஜூன் 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தவிருக்கும் சேவை வரிக்கு சினிமா துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வரியால் சினிமா துறைக்கு பேராபத்து வரும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் எச்சரித்துள்ளார்.

    எஸ்.ஆர்.பிக்சர்ஸ் பட நிறுவனம், ராமர் என்ற பெயரில், ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியனின் நண்பர் தயாரிக்கும் படம் இது. இதில், புதுமுகங்கள் வினய் தத்தா-அனுமோள் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். ஆதிராஜா டைரக்டு செய்கிறார்.

    படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர்கள் பார்த்திபன், சேரன், வெங்கட்பிரபு ஆகிய மூவரும் சேர்ந்து வெளியிட்டார்கள்.

    விழாவில், வாழ்த்திப் பேசிய வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறியதாவது:

    "சினிமாவுக்கு, ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரச்சினைகள் வந்து, அவைகளை நாம் சமாளித்து இருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்திருந்த சினிமாவை, முதல்வர் வரிவிலக்கு கொடுத்து, தூக்கி நிறுத்தினார்.

    ஜுன் 1-ந் தேதி முதல் மத்திய அரசு புதிதாக சேவை வரியை கொண்டுவர இருக்கிறது. அது, விஷ சுழல் மாதிரி சினிமாவை மிரட்டிக்கொண்டிருக்கிறது. அந்த வரியை கொண்டு வந்தால், சுழலில் சிக்கி சினிமா அழிந்து போகும்.

    வேடிக்கைப் பார்த்தாலோ, அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தாலோ, சினிமாவுக்கு பேராபத்து ஏற்பட்டு விடும். எனவே, உடனடியாக சினிமா துறையில் உள்ள அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் நேரில் போய், சேவை வரியை ரத்து செய்யும்படி, முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும்.

    சேவை வரி வந்துவிட்டால், ரூ.4 கோடிக்கு படம் எடுப்பவர், ரூ.40 லட்சம் வரி கட்ட வேண்டும். அந்த படத்தை வாங்குகிற வினியோகஸ்தர், படத்தை திரையிடும் தியேட்டர் அதிபர் ஆகியோரும் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு படத்துக்கு, பலமுனைகளில் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    சினிமாவில் லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும் சரி, சேவை வரியை கட்டியே ஆக வேண்டும். வலுவானவன் கையில், எளியவன் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.

    எனவே சினிமாவில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து, சேவை வரிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்..." என்றார்.

    விழாவில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், பிலிம்சேம்பர் செயலாளர் எல்.சுரேஷ், பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், டி.சிவா, ஜி.சிவா ஆகியோரும் பங்கேற்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X