twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலித் மக்களுக்கு எதிரான படம்: அமிதாப் நடித்த 'ஆராக்ஷனு'க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

    By Shankar
    |

    இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டு, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஆராக்ஷன் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

    பிரகாஷ் ஜா தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.

    சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்த எதிர்மறையான படமாக ஆராக்ஷன் வந்துள்ளது. குறிப்பாக சமூகத்தில் இன்னமும் பல்வேறு கொடுமைகளை எதிர்நோக்கி வரும் தலித் மக்களுக்கு எதிரான படமாக ஆராக்ஷன் பார்க்கப்படுகிறது.

    இந்தப் படம் சமூக அமைதியைக் கெடுக்கும், ஒடுக்கப்பட்ட இன மக்களை மேலும் பின்னிலைக்குத் தள்ளும் என்பதால் படத்தைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியா முழுக்க வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கெனவே இந்தப் படம் தொடர்பான விளம்பரங்களை உத்திரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது. மராட்டிய மாநிலத்திலும் தடை கோரப்பட்டுள்ளது.

    English summary
    The Madras High Court today banned Amitabh Bhachan starred Aarakshan for its controversial content which may disturb the society.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X