மீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்!
Recommended Video

சென்னை : வசூலில் உலகம் முழுவதும் பல புதிய சரித்திரம் படைத்த 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்.
'பாகுபலி' படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார்.
'மெர்சல்' படத்திற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ராகவா லாரன்ஸ் படத்துக்கு
இந்தப் படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்திற்குப் பிறகு இந்தப் படம் உருவாக இருக்கிறது.

தமிழிலும் வெளியாகும்
லாரன்ஸ் நடிக்கவிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மகாதேவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

மதன் கார்க்கி வசனம்
தமிழில் பல படங்களை தயாரித்துள்ள 'கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜயேந்திர பிரசாத்தின் கதையில் தயாராக உள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார்.

1 கோடி சம்பளம்
இந்தப் படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











