»   »  கபாலியை ஏன் மிஸ் பண்ணக்கூடாது? இதோ பத்து காரணங்கள்!!

கபாலியை ஏன் மிஸ் பண்ணக்கூடாது? இதோ பத்து காரணங்கள்!!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

எத்தனை செய்திகள் வந்தாலும் அத்தனையும் தூக்கி சாப்பிட்டு ட்ரெண்டில் நம்பர் ஒன்னாகவே நீடிக்கிறது கபாலி. இதுவரை இந்தியப் படங்களில் எந்த படமும் இத்தனை எதிர்பார்ப்புகளை உருவாக்கவில்லை. அத்தனை பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. சரி, கபாலியை நாம் ஏன் மிஸ் பண்ணக்கூடாது? பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான பத்து காரணங்களைப் பார்ப்போம்...

மொழிகளை வென்ற கபாலி

மொழிகளை வென்ற கபாலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தோற்றம் சமீபகால படங்களில் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கபாலி படம் தெலுங்கு, ஹிந்தி, மலாய் (மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், ப்ரூனே, தாய்லாந்து நாடுகளில் பேசப்படும் மொழி) என உலகில் அதிக மொழிகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் கபாலி தான். இத்தனை மொழிகளில் வெளியாவதால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறது இந்திய சினிமாவே.


மூன்று முகம்

மூன்று முகம்

நெருப்பு டா டீசரை ஒரு ரசிகர் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் ஒரே ஒருமுறையோடு நிறுத்த முடியாது. ரஜினியின் மூன்றுவிதமான வித்தியாச தோற்றங்கள் ஒவ்வொரு ரசிகனையும் பெரிய அளவில் பரவசப்படுத்தியது. இளம் வயது, சால்ட் அண்ட் பெப்பர் என்னும் நடுத்தர வயது மற்றும் வயதான தோற்றம் என வெரைட்டி காண்பித்திருக்கிறார்கள்.


மீண்டும் முள்ளும் மலரும்

மீண்டும் முள்ளும் மலரும்

கபாலியில் ரஜினி இள வயது கபாலியாக அதிக நேரம் வருகிறாராம் ரஜினி. இந்த தோற்றம் ரஜினியின் ஃபேவரிட் படமான முள்ளும் மலரும் படத்தில் வரும் காளி தோற்றம் போலவே இருக்கிறது. அந்த தோற்றத்துக்கும் நடை உடை பாவனைக்கும் இன்ஸ்பிரேஷனே காளி கேரக்டர் தான் என்று சொல்லி சிரிக்கிறது கபாலி குழு.


கபாலி கதை

கபாலி கதை

கபாலியில் ரஜினி, கபாலீஸ்வரன் என்ற கேரக்டரில் வருகிறார். ஆங்கிலேய காலத்திலேயே மலேசியாவில் குடியேறிய குடும்பத்தின் வாரிசாக ரஜினி நடிக்கிறார். மலேஷியாவில் அடிமைபடுத்தப்பட்டிருக்கும் இந்திய தொழிலாளிகளுக்காக போராடும் போராளியான ரஜினி, பின்னாட்களில் மிகப்பெரிய டானாக உருவெடுப்பதும், எதிரிகளை அழிப்பதும்தான் கதை. இந்த கதையும், திரைக்கதையும் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கே படத்தை பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தியிருக்கிறது.


கபாலி வில்லனா?

கபாலி வில்லனா?

கபாலி என்ற பெயர் இதற்கு முன்பு நிறைய தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வில்லன் பெயர்களாகவே... முதன்முறையாக கபாலி என்னும் கதாநாயகனை பார்க்க போகிறோம். இந்த பெயர் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு ரொம்பவே பொருந்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் ரஞ்சித். பொதுவாகவே நெகட்டிவ் பெயர் கொண்ட பாசிட்டிவ் கேரக்டர்கள் சினிமாவில் எடுபடும். அந்த வகையில் கபாலி என்ற பெயருக்கே ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.


டீஸர்

டீஸர்

ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் அதிகம் நடுத்தர வயதினரே... அவர்கள் இணைய உலகத்தில் இருப்பார்களா? என்ற சந்தேகத்தை பொசுக்கித் தள்ளியிருக்கிறது கபாலி டீஸர். அன்னிக்கும், இன்னிக்கும் மட்டும் அல்ல 'என்னிக்குமே ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிதாண்டா' என்பதை நிரூபிக்கும் வகையில் மே 1 அன்று வெளியான டீசர் 24 மணி நேரத்திலேயே 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இதுவரை மட்டுமே 25 மில்லியனைத் தாண்டி சாதனையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது கபாலி டீஸர்.


விமானத்தில் கபாலி

விமானத்தில் கபாலி

இது இதுவரை எந்தப் படத்துக்குமே செய்யப்படாத ஒரு ஸ்பெஷல். கபாலி ரஜினியின் படங்கள் தாங்கிய விமானங்கள் பறக்க ஆரம்பித்துள்ளன. ஏர் ஏசியா விமான நிறுவனம் கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னர். பெங்களூருவில் இருக்கும் ஒரு ரஜினி ரசிகர் ஆசைப்பட்டால் சென்னைக்கே வந்து முதல் நாள் முதல் காட்சியை ஹாயாக கண்டு ரசித்துவிட்டு திரும்பலாம். விமான டிக்கெட், படத்துக்கான டிக்கெட், லன்ச், ஆடியோ சிடி இன்னும் பிற வசதிகளையும் உள்ளடக்கிய இந்த பயணத்தை வெறும் 7860 ரூபாய்க்கு வழங்குகிறது ஏர் ஏசியா.


கபாலி போஸ்டர் ஃபீவர்

கபாலி போஸ்டர் ஃபீவர்

மலேசியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் கபாலி போஸ்டர்களே தென்படுகின்றன. கபாலி போஸ்டர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டி மகிழ்கின்றனர். படத்துக்கான புரமோஷன் என்ற ஒன்றைத் தனியாக செய்ய வேண்டிய தேவையில்லை என்னும் அளவுக்கு ரசிகர்களே அதனை கையில் எடுத்துக் கொண்டாடுகின்றனர். உலகின் அதி உயர் விலை கொண்ட கார்களில் ஒன்றான லம்போகினியில் கூட கபாலி ரஜினி சிரிக்கிறார் என்றால் அவர் ரேஞ்சை நினைத்துப் பாருங்கள்!


நெருப்புடா

நெருப்புடா

கபாலி பாடல்கள் தான் இன்னும் நம்பர் ஒன். ரிலீஸான வேகத்தில் டவுன்லோட் செய்யப்பட்ட பாடல்களின் டவுன்லோட் எண்ணிக்கையை கணக்கெடுத்தால் எண்ணி மாளாது. ஐட்யூனில் டவுன்லோட் செய்யப்படும் பாடல்களில் நம்பன் ஒன் இடத்திலேயே நீடிக்கிறது கபாலி பாடல்கள்.


பத்தாவது காரணம்

பத்தாவது காரணம்

இத்தனையும் தாண்டி ஒரே ஒரு விஷயம்தான் விவரம் தெரிந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அத்தனை பேரையும் கபாலியை நோக்கி ஈர்த்திருக்கிறது. அது ஒன் அண்ட் ஒன்லி ரஜினி மட்டுமே... அந்த காந்தம் தான் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது!


English summary
Here is the top 10 reasons for why we shouldn't miss Rajinikanth's magnum opus Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil