என்னது...1000 அடியில் பேனரா...மதுரையை அதிர வைக்கும் சிம்பு பேனர்

சென்னை : டைரக்டர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மஹா. ஹன்சிகாவின் 50வது படமாக தயாராகி உள்ள இந்த படம் நீண்ட காலமாக ரிலீஸ் செய்யப்படாமல் தாமதமாகி வந்தது.

1000 feet banner for Simbu in Madurai

இந்நிலையில் சமீபத்தில் ஜுலை 21 ம் தேதி மகா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான தம்பிராமையா, சூர்யாவுக்கு விக்ரம் படம் போல் சிம்புவிற்கு இந்த படம் அமையும்.

Recommended Video

என்னது...1000 அடியில் பேனரா...மதுரையை அதிர வைக்கும் சிம்பு பேனர்

விக்ரமில் 3 நிமிடங்கள் நடித்த சூர்யாவின் ரோலால் அந்த படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. அதே போல் 40 நிமிடங்கள் சிம்பு நடித்த இந்த படமும் ஹிட் ஆகும் என்றார். ஹன்சிகா லீட்ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

மகா படம் ரிலீசாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தை கொண்டாடும் விதத்தில் மதுரையில் உள்ள சிம்பு ரசிகர்கள் 1000 அடிக்கு பேனர் வைத்துள்ளனர். பாலத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை இந்த பேனரை வைத்துள்ளனர். இதன் வீடியோ தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது. இவர்கள் சிம்புவின் ஒவ்வொரு படத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களின் அப்டேட்களை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

1000 feet banner for Simbu in Madurai

ஆனால் அவர் ஹீரோவாக நடிக்காமல் கெஸ்ட் ரோல் நடித்த இந்த படத்திற்கு இவ்வளவு அலப்பறையா என நெட்டிசன்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். சிம்புவிற்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்களா என்றும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் நடிகர் ஒருவருக்கு இவ்வளவு நீளமான பேனர் வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதுவரை பாலிவுட், கன்னட ரசிகர்கள் தான் இப்படி உயரமான கட்டஅவுட் வைப்பார்கள். கோலிவுட்டில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு தான் இப்படி கட்அவுட் வைப்பது வழக்கம். ஆனால் ஹீரோ ஒருவருக்கு இவ்வளவு நீளமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X