twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் பெயரிடப்படும் படங்கள்-வரிவிலக்கு தொடரும்!

    By Chakra
    |

    சென்னை: திரைப்படத் தொழிலுக்கு ஊக்கம் தரும் வகையில் தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

    செய்தி விளம்பரம், எழுதுபொருள் அச்சுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நேற்று பதில் அளித்து, அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

    எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களின் பயிற்சிக்கென, ரூ.50 லட்சம் செலவில் நவீன கருவிகள் வழங்கப்படும்.

    தமிழ்நாடு திரைப்படப்பிரிவின் செய்திப் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை மேம்படுத்த நவீன, அதிக துல்லியம் வாய்ந்த 3 வீடியோ படப்பிடிப்பு கருவிகள் ரூ.27 லட்சத்தில் வழங்கப்படும்.

    தலைமையிடம் மற்றும் மாவட்டங்களில் உள்ள புகைப்பட பிரிவினை மேம்படுத்த, துல்லியமாக நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி புகைப்படமெடுக்க, புகைப்படப்பிரிவுக்கு 4 வைட் ஆங்கிள் போட்டோகிராபிக் லென்சுகள் ரூ.2.40 லட்சத்தில் வாங்கி வழங்கப்படும்.

    செய்தி வெளியீட்டுப் பிரிவினை நவீனப்படுத்திட அதிக திறன் வாய்ந்த ஸ்கேனர் கருவி ஒன்று, அதிநவீன ஒளிநகல் கருவி ஒன்று, அதிக திறன் வாய்ந்த நிகரி கருவிகள் இரண்டு, கணினி ஒன்று மற்றும் இரு ஒலிப்பதிவு கருவிகளும் ரூ.2.12 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்படும்.

    இத்துறையின் தலைமையிடம் மற்றும் மாவட்ட புகைப்படக்காரர்கள் பயன்பாட்டுக்கு இணையதள வசதியுடன் கூடிய 4 மடிக் கணினிகள் ரூ.1.60 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்படும்.

    திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படும்.

    தலைமையிடத்தின் பயன்பாட்டுக்கு 5 அம்பாசிடர் கார்கள் ரூ.27.50 லட்சம் செலவில் வாங்கப்படும். தலைமையிடம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களின் பயன்பாட்டுக்கென பழைய கணினிகளுக்கு மாற்றாக ரூ.3.2 லட்சம் செலவில் 10 புதிய கணினிகள், ரூ.80 ஆயிரத்தில் 10 லேசர் பிரிண்டர் கருவிகள் மற்றும் ரூ.2.25 லட்சம் செலவில் 5 ஒளிநகல் கருவிகளும் வாங்கி வழங்கப்படும்.

    அரசு அச்சக தொழிற்கூடத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருபால் தொழிலாளர்களுக்கும் காலணிகள் வழங்கப்படும். சேலம் அரசு கிளை அச்சகத்துக்கு ரூ.95 லட்சத்தில் 2 ஆப்செட் எந்திரம் வாங்கப்படும்

    அரசு மைய அச்சக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திட ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா நிறுவப்படும்.

    அரசு மைய அச்சகத்தில் ரூ.40 லட்சத்தில் மின்னணு அச்சு எந்திரம் நிறுவப்படும்;

    ரூ.15.30 லட்சத்தில் தானியங்கி உறை மடிக்கும் மற்றும் பசை ஒட்டும் எந்திரம் வழங்கப்படும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X