twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தி மறு அவதாரம் எடுக்கும் “முதல்வர் மகாத்மா” படத்தைப் பார்த்த அன்னா

    By Siva
    |

    Mudalvar Mahatma
    சென்னை: சென்னை வந்துள்ள அன்னா ஹசாரே, காமராஜர் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தின் இந்தி பதிப்பை நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரி்ல் பார்த்து ரசித்தார்.

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொண்டார். முதலில் இயக்குனர் பாலகிருஷ்ணனனின் முதல்வர் மகாத்மா படத்தின் இந்தி பதிப்பு நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரி்ல் அவருக்காக விஷேசமாக திரையிடப்பட்டது. பாலகிருஷ்ணன் ஏற்கனவே காமராஜ் என்ற படத்தை இயக்கியவர். முதல்வர் மகாத்மா படத்தை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் எடுத்துள்ளார்.

    இதில் இந்திப் படத்தின் விஷேச காட்சியை அன்னா ஹசாரே, கிரண்பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் பார்த்து, ரசித்து, பாராட்டினர்.

    படத்தின் கதை விவரம் வருமாறு,

    தன் தாய்நாடு பின்னோக்கி செல்வதால் தான் மீண்டும் உலகிற்கு சென்று மக்களுக்கு உதவ விரும்புவதாக கடவுளிடம் கோரிக்கை விடுக்கிறார் காந்தி. அதை ஏற்ற கடவுள் காந்தியை ஒரு கிராமத்தில் துப்புரவு தொழிலாளியாகப் பிறக்க வைக்கிறார். காந்தி தான் பிறக்கும் கிராமத்தில் ஆசிரமம் துவங்கி மக்களுக்கு உதவுகிறார். இயற்கைக்கு எதிராக சத்யாகிரகம் இருந்து மழையை வரவழைக்கிறார். இதைப் பார்த்த மக்கள் அவர் பின்னால் செல்கின்றனர்.

    இதனால் ஊழல்வாதிகளும், சுயநல தொழில் அதிபர்களும் காந்தியை எதிர்க்கிறார்கள். அவருக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கின்றனர். அவற்றை எல்லாம் காநதி சகித்துக் கொண்டிருக்கும் வேளையில் சித்தார்த் என்ற குறும்பட தயாரிப்பாளர் அவரை சந்தித்து சீடராகிறார். அவரிடம் காந்தி தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மறைந்து விடுகிறார்.

    இந்த படத்தில் காந்தியாக நடித்திருப்பவர் காமராஜ் படத்தில் காமராஜாக நடித்த கனகராஜ் (61). காந்தியின் சீடராக பாலிவுட் நடிகர் அனுபம்கேர் நடித்துள்ளார்.

    2 மணி நேரம் ஓடும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அன்னாவை அவரது சொந்த ஊருக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தார் பாலகிருஷ்ணன். நிச்சயம் பார்ப்பதாக அப்போது அவருக்கு வாக்களித்திருந்தார் அன்னா. அதன்படி இன்று படத்தைப் பார்த்து தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த பல வருடங்களாக படமே பார்க்காமல் இருந்து வந்தவர் அன்னா. இன்றுதான் அவர் முதல் முறையாக படம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Anna Hazare and his supporters have watched a movie named 'CM Mahatma' in which Gandhiji is shown as coming back to India again. Actor Kanakaraj has acted as Mahatma in the movie directed by Balakrishnan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X