For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அறம் போதிக்கின்றதா 2.0?: சிறார் எழுத்தாளரின் கட்டுரை

  By Siva
  |

  சென்னை: 2.0 படம் குழந்தைகளுக்கான படம் இல்லை என்று சிறார் எழுத்தாளரான விழியன் தெரிவித்துள்ளார்.

  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2.0 படம் குழந்தைகளுக்கு ஏற்ற படம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறார் எழுத்தாளரான விழியன் வேறு விதமாக கூறுகிறார்.

  படம் குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

  விருந்து

  விருந்து

  2.0 ஒரு visual treat. அதில் ஒரு துளி சந்தேகமும் வேண்டாம். பெயர் போடுவதில் ஆரம்பித்து சுபம் கார்ட் போடுவது வரை கண்ணிற்கு விருந்து, மிரட்டல். முதல் நாள் வந்த பல ரிவ்யூக்களில் இது குழந்தைகளுக்கான படம் அவர்களை அழைத்துச்செல்லுங்கள் என குறிப்பிட்டு இருந்தார்கள். அது எவ்வளவு சர்காஸ்டிக் என்பது படம் பார்த்த பின்னரே புரிந்தது. ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம் என நிறைய காரணங்களை அடுக்கலாம்.

  அக்ஷய் குமார்

  அக்ஷய் குமார்

  அடிப்படையான ஒன்று அறம். பக்‌ஷிராஜன் பறவைகளுக்காக போராடுகின்றார். அவர் தரப்பில் ஒரு துளிகூட அநியாயம் இருப்பதாக படத்தில் கூட காட்டவில்லை. இறந்த பிறகு அந்த பவித்ரமான ஆத்மா எப்படி கொடுரமான ஆத்மாவாக மாறுகின்றது. Aura கூற்றுப்படியும் இது எப்படி +ve பெரும் -veவாக மாறுகின்றது. முரணாக பறவைகள் மீது அன்பு கொண்டு இறுதி காட்சிகளில் பக்‌ஷிராஜன் தடுமாறுகின்றார், அப்படியெனில் ஒவ்வொரு குடிமகனையும் ஏன் கொடூரமாக சிதைக்க வேண்டும்? இறுதிக்காட்சியில் வசீகரன் மொபைல் போன் பற்றி பேசுவதை கேட்க திரையரங்கத்தில் யாருமே இல்லை. சிட்டி பக்‌ஷிராஜனை அழித்ததுமே படம் முடிந்து விடுகின்றது. அதன் பிறகு சொல்லப்படுவதை யாரும் காது கொடுத்து கேட்கப்போவதில்லை.

  பேய்

  பேய்

  குழந்தைகளுக்கு என்ன புரியும்? செழியனை பக்‌ஷிராஜன் யார் என்று கேட்டேன். அவர் ஒரு பேய் என்றான். நியாயத்திற்காக போராடினால் உனக்கு கிடைப்பது இதுவே என்று குழந்தைகள் மனதில் பதியாதா? இது அறமாகுமா? சரி, குழந்தைகள் படத்தினை பார்க்க வருவார்கள் என்று தெரியும் தானே. அவர்களை கவர ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் உண்டு தானே? பின்னர் எதற்கு இத்தனை வன்முறை? எதற்கு இத்தனை கொடூரம். எதற்கு இத்தனை ரத்தக்காட்சிகளும் சிதறல்களும்? படத்தின் ஆரம்பத்திலேயே பயம் தொற்றிக் கொண்ட பின்னர் குழந்தைகளால் எப்படி படத்தை பார்க்க முடியும்?

  தண்ணீர்

  தண்ணீர்

  எல்லாம் முடிந்துவிட்டு கடைசியில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்க என்றால் அவர்கள் எப்படி வைப்பார்கள்? பறவை என்றாலே ஒரு பயத்தை படம் முழுக்க உண்டுசெய்துவிட்டு ஒரு ஒன்லைனரில் நல்ல விஷயம் சொல்வது எப்படி பதியும்? வார்த்தைகளை விட அதனை ஒரு காட்சியாகவாவது வைத்திருக்க வேண்டும். இவை எல்லாம் ஒரு குழந்தை படம் பார்ப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தே.

  நடிப்பு

  நடிப்பு

  டெக்னாலஜி, திரைக்கதை, நடிப்பு, காஸ்டிங், டைரக்‌ஷன் எல்லாம் வேற லெவல் தான். (பறவைகளை வதைக்கக்கூடாது என்றால் அந்த வயோதிகரை வதைப்பதும் தவறு தானே என எங்காச்சும் யாராச்சும் கேட்டிருக்காங்களா?) அடிப்படையில் M.Tech கம்யூனிகேஷ்ன் பட்டதாரி என்பதால் சில விஷயங்களை சேர்த்து சொல்லி விடுகின்றேன். LandLineக்கும் Tower வேண்டும் சார். அப்புறம் அதிக Frequencyல் தரீங்கன்னு சொல்வது Technically சாத்தியமில்லை, ஒவ்வொருவருக்கு ஒரு Band மட்டுமே allocated. மேலும் cellphoneகளால் எல்லா உயிர்களுக்கும் பாதிப்பு உண்டு, மனிதனுக்கும் இன்னும் அதிகமாகவே உண்டு (நிரூபிக்கப்பட்ட ஒன்று).

  நூடுல்ஸ்

  படம் பார்த்துவிட்டேன் என்றதும் பல நண்பர்கள் "குழந்தைகளை அழைத்துச் செல்லலாமா? பிடிக்குமா?" என்று கேட்டார்கள். "மேகி நூடுல்ஸ் பார்க்க நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் அதற்காக குழந்தைகளுக்கு கொடுப்பீர்களா?" என்று பதில் சொல்லலாம் என்று தோன்றியது, "எப்பவாச்சும் கொடுப்பதால் என்ன கெடுதல் வந்திடப்போகுது" என்ற பதில் வருமே என்றும் அச்சமாக இருக்கின்றது. பேண்டசி கதையில் லாஜிக் பார்க்கக் கூடாது ஆனால் அறம் பார்க்கவேண்டும். டாட் என்று விழியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  English summary
  Kids writer Vizhiyan has posted on his facebook page that Rajini starrer 2.0 is definitely not for children.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X