twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் கொள்ளை..வேலைக்காரன் உட்பட 3 பேர் நேபாளத்தில் கைது..சிக்கியது எப்படி

    |

    நடிகர் ஆர்.கே. வீட்டில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கொள்ளையில் கொள்ளையர்கள் 3 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    நடிகர் ஆர்கே தொழிலதிபராக உள்ளார். இதற்கு முன்னர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

    இவரது வீட்டில் நடந்த கொள்ளையில் 3 பேர் 200 சவரன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    விக்ரம் பட நடிகர் வீட்டில் ’குவா குவா’ சத்தம்.. 43 வயதில் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நரேன்! விக்ரம் பட நடிகர் வீட்டில் ’குவா குவா’ சத்தம்.. 43 வயதில் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நரேன்!

     சென்னையில் நீண்ட ஆண்டுகளுக்குப்பின் ஒரு சம்பவம்

    சென்னையில் நீண்ட ஆண்டுகளுக்குப்பின் ஒரு சம்பவம்

    சென்னையில் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தாலும் இதுவரை சென்னையில் இல்லாத ஒரு சம்பவமாக கொள்ளை கும்பல் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை அடித்த சம்பவம் நடந்ததாக சமீபத்திய ஆண்டுகளில் பதிவில்லை. ஆனால் அதுவும் நடந்தது. கடந்த 10 ஆம் தேதி சென்னையில் அடைமழை பெய்தது. அப்போது புறநகரான நந்தம்பாக்கத்தில் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நடிகர் ஆர்.கேவின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொள்ளை கும்பல் கத்தி முனையில் ஆர்கே மனைவியை மிரட்டி அவரை கட்டிப்போட்டு 200 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

     வேலைக்காரனாக நுழைந்து வில்லனான கொள்ளைக்காரன்

    வேலைக்காரனாக நுழைந்து வில்லனான கொள்ளைக்காரன்

    விஜய்யின் ஜில்லாவில் வில்லனாக நடித்த ஆர்கேக்கு தண்ணி காட்டும் வகையில் வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்த நேபாளி வேலைக்காரன் ரமேஷ் என்பவர் ஆர்கே வீட்டை நோட்டமிட்டு ஆர்கே வீட்டில் நகை பணம் புழங்கும் இடங்களை அறிந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திட்டமிட்டு ஆர்கே ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவர் மனைவியை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 200 சவரன் நகைகள், 3 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

     சினிமா வில்லனுக்கே நிஜ வில்லனான வேலைக்காரன்

    சினிமா வில்லனுக்கே நிஜ வில்லனான வேலைக்காரன்

    நடிகர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் அழகர் மலை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தார். காந்தப்படுக்கை விவகாரத்தில் சிக்கிய இவர் மீது புகார்கள் உள்ளது. அதன்பின்னர் அவன் இவன் படத்தில் ஜமீந்தாரை கொல்லும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். ஜில்லா படத்திலும் விஜய், மோகன்லாலுக்கு வில்லனாக சில காட்சிகளில் வருவார். தொழிலதிபரான இவர் வீட்டில் இல்லாத நேரத்தை கவனித்து பின் வாசலை திறந்து வைத்துவிட்டு ஆர்.கே மனைவியிடம் வெளியில் போவதாக சொல்லிவிட்டு சென்ற வேலைக்காரன் நண்பர்கள் கும்பலுடன் பின்வாசல் வழியாக உள்ளே புகுந்து கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

     8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 8 தனிப்படை

    8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 8 தனிப்படை

    அதன் பின்னர் இவர்கள் நேபாள் தப்பிச் செல்ல திட்டமிட்டதை அறிந்த போலீஸார், வேலைக்காரன் போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளதை அறிந்த போலீஸார் கொள்ளையர்கள் நேபாளம் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க கொள்ளையர்களை பிடிக்க 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், நேபாளுக்கும் தனிப்படை விரைந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு தீவிர தேடுதல் வேட்டையை போலீஸார் நடத்தினர்.

     நேபாளில் பதுங்கியிருந்த வேலைக்காரன் உட்பட 3 பேர் கைது

    நேபாளில் பதுங்கியிருந்த வேலைக்காரன் உட்பட 3 பேர் கைது

    5 நாட்களுக்கு மேலாக நேபாளத்தில் முகாமிட்ட போலீசார் மூளையாக செயல்பட்ட ஆர்கே வீட்டு வேலைக்காரன் ரமேஷ் உட்பட 3 கொள்ளையர்களை கைது செய்தனர். ஆர்கே வீட்டில் காவலாளியாக பணிப்புரிந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கிருஷ்ணா, கரண் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 150 சவரன் நகையை மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதும் குண்டு கிருஷ்ணா என்பவர் இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக செயல்ப்பட்டுள்ளதும், காவலாளி ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்துள்ளது.

     மேலும் 3 பேருக்கு தொடர்பு அவர்களையும் பிடிக்கும் பணி மும்மூரம்

    மேலும் 3 பேருக்கு தொடர்பு அவர்களையும் பிடிக்கும் பணி மும்மூரம்

    மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குண்டு கிருஷ்ணா, ஹரக் தேவகொட்டா உள்ளீட்ட மூவரை பிடிக்கவும் மீதமுள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சென்னை கொண்டு வரும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை நடந்த குறுகிய காலக்கட்டத்தில் கொள்ளையர்களில் 3 பேரை கைது செய்து 60% நகைகளை மீட்ட போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

      English summary
      3 robbers have been caught in the robbery that took place at the house of Actor R.K. They are looking for 3 more people. Actor RK is a businessman. He has acted as the lead in some films before this. He is also producing the film. In the robbery at his house, 3 persons looted 200 pieces of jewelry and Rs.3 lakh in cash.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X