»   »  தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் இளம் நடிகர்கள்... வெற்றியைப் பறிக்கப்போவது யார்?

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் இளம் நடிகர்கள்... வெற்றியைப் பறிக்கப்போவது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருட தீபாவளி ரேஸில் விக்ரம் பிரபு, ஜீவா, தனுஷ், கார்த்தியுடன் சேர்ந்து நடிகர் விஜய்யும் குதிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது வழக்கம்.

கடந்த வருட தீபாவளிக்கு அஜீத் நடிப்பில் 'வேதாளம்', கமல்ஹாசன் நடிப்பில் 'தூங்காவனம்' என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி மோதிக் கொண்டன.

இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்கு 'காஷ்மோரா', 'திருநாள்', 'வீர சிவாஜி', 'கொடி' ஆகிய படங்களுடன், விஜய் பரதன் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படமும் வெளியாக வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் 60

விஜய் 60

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 60 வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு வில்லன்களாக டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், ஜெகபதி பாபு என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை தீபாவளி ரேஸில் களமிறக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

காஷ்மோரா

காஷ்மோரா

கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா நடிப்பில் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் 'காஷ்மோரா'. சமீபத்தில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இப்படத்தை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. காஷ்மோராவுடன் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

கொடி

கொடி

'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை' படங்களைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் 'கொடி'. முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடம் ஏற்று நடித்திருப்பது, தனுஷ்-திரிஷா ஜோடி ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. தற்போதைய நிலவரப்படி தீபாவளி ரேஸில் கொடியும் குதிக்கப் போவதாகத் தெரிகிறது.தனுஷின் சமீபத்திய படங்கள் அவருக்கு பெரியளவில் கைகொடுக்காத நிலையில் 'கொடி' எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

திருநாள்

திருநாள்

நீண்ட நாட்களாக உருவாகி வந்த 'திருநாள்' படத்தையும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஜீவா, நயன்தாராவுடன் சேர்ந்து கோபிநாத், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியிருக்கிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.நயன்தாராவின் ஹிட் ராசி இப்படத்திற்கு கைகொடுத்தால் சரிதான்.

வீர சிவாஜி

வீர சிவாஜி

விக்ரம் பிரபு-ஷாமிலி நடித்து வரும் 'வீர சிவாஜி' படமும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேபோல படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தீபாவளிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இவற்றில் சில படங்களின் வெளியீட்டுத் தேதி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

English summary
Sources said Kodi, Kashmora, Thirunaal, Veera Sivaji and Vijay 60 may be Clash on Diwali Battle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil