»   »  ஜெ. பட்ட கஷ்டங்களுக்கு முன்பு என் கஷ்டமெல்லாம் ஒன்னுமே இல்லை: ரோஜா

ஜெ. பட்ட கஷ்டங்களுக்கு முன்பு என் கஷ்டமெல்லாம் ஒன்னுமே இல்லை: ரோஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஜெயலலிதாவின் மரணத்தால் 2016ம் ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டாகிவிட்டதாக நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஹைதராபாத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசினார்.

கூட்டத்தில் அவர் ஜெயலலிதா பற்றி கூறியதாவது,

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா. சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது வேறு பெண்ணாக இருந்தால் அரசியலே வேண்டாம் என சென்றிருப்பார். ஆனால் ஜெயலலிதாவோ அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போராடி முதல்வர் ஆனார்.

பெண்கள்

பெண்கள்

சாதாரண பெண்களால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைக்கும் ஆண்களுக்கு முன்னால் சாதனை நாயகியாக பலவற்றை நிரூபித்துவிட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா.

சினிமா

சினிமா

ஜெயலலிதா சினிமா துறையை சேர்ந்தவர் என்பது பெருமை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது பெருமை. அவர் முதல்வர் ஆனதும் பெருமை.

வேண்டாம் அம்மா

வேண்டாம் அம்மா

என்னை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ததும் என் மகள் என்னிடம் வந்து அரசியல் வேண்டாம் அம்மா விட்டுவிடு. நீ ஏன் அவமானப்பட வேண்டும் என்று கேட்டாள்.

கஷ்டம்

கஷ்டம்

ஜெயலலிதா பட்ட கஷ்டங்களுக்கு முன்பு என் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் தனி ஆளாக போராடி வென்றார். அதனால் என் கஷ்டம் பெரிதாக தெரியவில்லை என்று நான் என் மகளிடம் கூறினேன். ஜெயலலிதாவின் வாழ்க்கை அனைத்து பெண்களுக்கும் வழிகாட்டி, உந்து சக்தி ஆகும். அவரின் மரணத்தால் 2016ம் ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டு ஆகும்.

English summary
Actress cum YSR congress MLA Roja said that 2016 was really a bad year for film industry as former CM Jayalalithaa passed away.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil