twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய், அஜித், தனுஷ்.. யாருக்கு முதலிடம்.. 2019-ன் டாப் 10 சிறந்த நடிகர்கள் இவங்கதான்!

    |

    சென்னை: ஆணாதிக்க ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்த பிரபல மாஸ் ஹீரோக்கள் பெண்ணியத்தை முன்னிலைப்படுத்தி இந்த ஆண்டு தங்களின் இமேஜை குறைத்துக் கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    2019ம் ஆண்டு மாஸ் படங்களை விட பல நல்ல கிளாஸ் படங்களையும் ஹீரோக்கள் கொடுத்துள்ளனர்.

    முன்னணி நட்சத்திரங்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

    2019ம் ஆண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 10 ஹீரோக்கள் பட்டியலை இங்கே பார்ப்போம்.

    2019ன் பெஸ்ட் நடிகர் யார்.. ஒட்டுப் போடுங்க

    10. சூர்யா

    10. சூர்யா

    என்.ஜி.கே., காப்பான் என நடிகர் சூர்யா இந்த ஆண்டு இரண்டு படங்களை கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு படங்களுமே இந்த ஆண்டு அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படமும் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    9. ஆர்யா

    9. ஆர்யா

    இந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படம் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டும் ஆர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. இரு வேடங்களில் நடித்து ஆர்யா இந்த படத்தில் அசத்தியிருந்தார். காப்பான் படத்திலும் ஆர்யா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். அடுத்த ஆண்டு ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படம் வெளியாகவுள்ளது.

    8. அருண் விஜய்

    8. அருண் விஜய்

    அதே போல நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்திலும், இரு வேடங்களில் அருண் விஜய் நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை இந்த ஆண்டு கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு அவர் நடிப்பில் மாஃபியா, சினம், ஏவி 31 என மூன்று படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

    7. ரஜினிகாந்த்

    7. ரஜினிகாந்த்

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரஜினிஸம், தலைவர் கரிஷ்மா, ஸ்டைல் என ரஜினி ரசிகர்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் ஒரு ரசிகனாக வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த வயதிலும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என வசனம் பேசி, நஞ்சக் ஃபைட் போட்டு, கிடா மீசை வைத்து அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

    6. ஜெயம் ரவி

    6. ஜெயம் ரவி

    ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் ஜெயம் ரவிக்கு கோமாளி திரைப்படம் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. ஆக்‌ஷன் அவதாரத்தை மூட்டைக் கட்டி வைத்து விட்டு ஜனரஞ்சகமான நடிப்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

    5. கார்த்தி

    5. கார்த்தி

    கைதி படத்தில் லாரி ஓட்டும் டெல்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் அன்பையும் நடிகர் கார்த்தி பெற்றுள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி படம் கார்த்தியின் முதல் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படமாக மாறியுள்ளது. லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்திக்குள் இருக்கும் நடிப்பு அரக்கனை கைதி படத்தில் வெளிக் கொண்டு வந்திருந்தார். அந்த கொசு மருந்து சீனெல்லாம் வேற லெவல்.

    4. விஜய்

    4. விஜய்

    மைக்கேல், ராயப்பன், பிகில் மூன்று வேடங்களா என ரசிகர்களை யூகிக்க வைத்த தந்தை மகன் என்ற இரு ரோல்களில் அசுர நடிப்பை பிகில் படத்தில் இந்த ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளுத்திருந்தார். உலகளவில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களிலே அதிக பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை வென்றாலும், திக்குவாய் வயசான கெத்து தாதா ராயப்பன் நடிப்பில் விஜய் கலக்கியிருந்தார். அடுத்த ஆண்டு தளபதி 64 படத்திற்காக விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.

    3. அஜித் குமார்

    3. அஜித் குமார்

    இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தில் பாசமுள்ள தந்தையாகவும், நேர்கொண்ட பார்வை படத்தில் வயதான வக்கீலாகவும் நடித்து ‘நோ மீன்ஸ் நோ' என்ற வாசகத்தை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு சேர்ந்த தல அஜித்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் 2019ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு இதே வலிமை அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2. பார்த்திபன்

    2. பார்த்திபன்

    ஒரே ஒரு ஒத்த செருப்பை வச்சிக்கிட்டு இந்த ஆண்டு நடிகர் பார்த்திபன் பண்ண வேலை இருக்கே, அது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெருமை பட வேண்டிய விஷயம். ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர், என ஒரே ஒரு நடிகர் படம் முழுக்க டிராவல் ஆகியும் யாருக்கும் போரடிக்காமல் ஒரு உலகத் தரம் வாய்ந்த படைப்பை, நடிப்பை இந்த ஆண்டு நடிகர் பார்த்திபன் கொடுத்துள்ளார்.

    1.தனுஷ்

    1.தனுஷ்

    வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான அசுரன் படத்தில் இளைஞனாகவும், கல்யாண வயசு பையனுக்கு அப்பாகவும், வெறியேறும் காட்சிகளில் அசுரனாகவும் நடித்து தான் ஒரு நடிப்பு அசுரன் என மீண்டும் நிரூபித்துள்ளார் தனுஷ். எனை நோக்கிப் பாயும் தோட்டா, அசுரன் என தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பட்டாஸ், கார்த்திக் சுப்பராஜ் படம் என பல படங்கள் இவரது லைன் அப்பில் காத்துக் கிடக்கின்றன.

    ஸ்பெஷல் மென்ஷன்

    ஸ்பெஷல் மென்ஷன்

    சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை ஷில்பாவாக நடிகர் விஜய்சேதுபதி தனது லைஃப் டைம் நடிப்பை நடித்து அசத்தியிருப்பார். இந்த ஆண்டு பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சங்கத் தமிழன் படத்தில் முதல் முறை டபுள் ஆக்‌ஷன் ரோலிலும் நடித்து இந்த ஆண்டும் சிறந்த நாயகனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கெத்து காட்டுகிறார்.

    English summary
    Mass Heroes of Tamil Cinema lend their voice to female centric scripts this year. Ajith kumar’s Nerkonda Parvai, Vijay’s Bigil portrays female centric subjects this year. Vijay Sethupathi performed a Transgender character also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X