Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2021ல் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர்கள்… ட்விட்டர் வெளியிட்ட டாப் 5 லிஸ்ட் !
சென்னை : இந்த ஆண்டு ட்விட்டரில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர்களின் டாப் 5 பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளிட்டுள்ளது.
அதில் பிடிஎஸ் பாய்ஸ் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளனர்.லதா மங்கேஷ்கர் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
ரூ
3
கோடிக்கு
கார்,
2.7
கோடிக்கு
டைமண்ட்
நெக்லஸ்
...
கத்ரினா
ஜோடிக்கு
குவிந்த
காஸ்ட்லி
பரிசுகள்!
இதில் எந்த இசைக்கலைஞர் எந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதை விவரமாக பார்க்கலாம்.

ட்விட்டர் இந்தியா
2021 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால், இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற அல்லது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சினிமா துறையில் இந்த ஆண்டு தேசிய அளவில் மற்றும் தென்னிந்திய அளவில் முதல் இடம் பிடித்த நடிகர்கள், நடிகைகள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது

பிடிஎஸ் பாய்ஸ்
அந்தவகையில், டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட இசைகலைஞர்களின் டாப் 5 லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் பிடிஎஸ் பாய்ஸ் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளனர். தென்கொரியாவில் 2010-ல் ஏழுபேர் இணைந்து தொடங்கிய இசைக்குழு பேங்க்டன் பாய்ஸ்; இதன் சுருக்கமே பிடிஎஸ் எனப்படுகிறது. ஆரெம், ஜின், சுகா, ஜேஹோப், ஜிமின், வி, ஜுன்கூக் என்று மொத்தம் ஏழுபேர்கொண்ட கே-பாப் எனப்படும் இசைக்குழுதான் அது. அவர்களின் முழுப்பெயர்கள்தான் நம் வாயில் நுழையவில்லையே தவிர அவர்களது பாடல்கள் அனைவரின் காதுக்குள்ளும் நுழையத்தான் செய்கின்றன. பலர் இவர்களின் ரசிகையாக உள்ளனர்.

2ம் இடம்
தனது வசீகரமான குரலால் ஒட்டு மொத்த இதயத்தையும் கட்டிப்போட்ட லதா மங்கேஷ்கர் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

3வது இடம்
இசைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியவர் ஏ.ஆர். ரகுமான். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது இசையால் பல கோடி இதயங்களை வென்றவர் ஏ.ஆர். ரஹ்மான் 3வது இடத்தைபிடித்துள்ளார். மேலும், டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அர்மான் மாலிக் முறையே 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.