»   »  கபாலியை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க- ஹைஹோர்ட் உத்தரவு!

கபாலியை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க- ஹைஹோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் 225 இணையதளங்களை முடக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' வருகின்ற 22 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில் கபாலியை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்திருந்தார்.

225 Websites Banned on Kabali Case

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் '' கபாலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் 225 இணையதளங்களை முடக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் மற்றும் பேருந்துகளில் 'கபாலி'யை ஒளிபரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வருகின்ற ஆகஸ்ட் 8 ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

English summary
Kabali Case: The Madras High Court has ordered 225 portals to be banned.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil