மேடையில் அசிங்கமாக நடந்து கொண்ட நடிகருக்கு லவ் யூ சொன்ன இளம் நடிகை! புது அண்ணினு ரசிகர்கள் கிண்டல்!
சென்னை: கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் போஜ்புரி நடிகர் பவன் சிங் இணையவாசிகளிடம் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார். காரணம் அவர் மேடையில் நின்று கொண்டு இருந்த நடிகையின் இடுப்பை திரும்பத் திரும்ப தொட்டார். இதனால் கண்டனங்களை எதிர் கொண்டவர், அதன் பின்னர் மன்னிப்பு கேட்டார். இப்போது அந்த நடிகருக்கு 23 வயது இளம் பெண் ஐ லவ் யூ சொல்லி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலர் அந்த பெண்ணை புது அண்ணி என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
சில நடிகர்கள் பொது வெளியில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் பிடிக்காது. காரணம் ஆவர்கள் தாங்கள் தான் சுப்பீரியர் பவர் கொண்டவர்கள் தன்னை யாராலும் விமர்சனத்துக்கு ஆளாக்கி விட முடியாது, கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்பில் அவ்வாறு செய்வார்கள். குறிப்பாக மேடையிலேயே நடிகைகளை அவமரியாதையாக நடத்துவது, நடிகர்களை அவமரியாதையாக நடத்துவது, கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவது என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்படியான சம்பவம் செய்தவர்தான் பவன் சிங்.

மேடையில் அசிங்கம்: லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகை அஞ்சலி ராகவ் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்த போஜ்புரி நடிகர் பவன் சிங், நடிகை அஞ்சலி ராகவின் இடுப்பைத் தடவினார். அப்போது நடிகை முதலில் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் மேடை என்பதால் அவர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திவிட்டு அடுத்து பேசத் தொடங்கினார். அதன் பின்னர் பவன் சிங்கிற்கு எதிராக இணையவாசிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அஞ்சலியும் அந்த சம்பவத்தால் தான் மிகவும் மனவேதனையில் இருப்பதகாவும், சினிமாவில் இருந்து வெளியேறப் போவதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
புது அண்ணி: இப்படி இருக்கையில், பவன் சிங் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் நடிகர் பவன் சிங்கின் இரண்டாவது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவன் சிங் என்னையும் எனது குடும்பத்தினரையும் புறக்கணிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில், அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட 23 வயது இளம் பெண்ணுக்கு அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தருவதாக கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த பெண் டாஸ்க் ஒன்றில் இருக்கும்போது "பவன் சிங் ஐ லவ் யூ " என்று கத்தினார். அதற்கு "பவன் சிங்கும் ஐ லவ் யூ டூ" என்று கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவ, இணையவாசிகளோ, நமது புது அண்ணி இவங்க தான் என்று கூறி ட்ரோல் செய்து வருகிறார்கள்


Click it and Unblock the Notifications











