»   »  '24' இயக்குநர் விக்ரம் குமாருக்கு நிச்சயதார்த்தம்... செப்டம்பரில் திருமணம்!

'24' இயக்குநர் விக்ரம் குமாருக்கு நிச்சயதார்த்தம்... செப்டம்பரில் திருமணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் விக்ரம் குமார்-ஸ்ரீநிதி வெங்கடேஷ் திருமணம் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

தமிழில் அலை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் குமார். சிம்பு-திரிஷா நடிப்பில் வெளியான அலை ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

24 Director Vikram Kumar Engagement

6 வருடங்கள் கழித்து மாதவனை வைத்து விக்ரம் குமார் இயக்கிய யாவரும் நலம் தமிழ் சினிமாவில், அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

சமீபத்தில் டைம் டிராவலை அடிப்படையாக வைத்து சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய 24 திரைப்படம் உலக அளவில், 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்ரீநிதியை சந்தித்த விக்ரம் குமார் அவர்மீது காதல் வசப்பட, தற்போது இவர்களின் காதல் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆமாம்.கடந்த வாரம் ஸ்ரீநிதி வெங்கடேஷ்-விக்ரம் குமார் நிச்சயதார்த்தம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். ஸ்ரீநிதி வெங்கடேஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்துக்குப்பின் அல்லு அர்ஜுனை வைத்து தனது அடுத்தப் படத்தை விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார்.

English summary
24 Fame Director Vikram Kumar Gets Engaged. Vikram Kumar- Srinidhi Venkatesh Marriage may be held on September.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil