twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "போன் வயரே பிஞ்சு போகும் அளவுக்கு".. உருகவைத்த காதல்கோட்டை… என்றும் பெருமை பேசும்!

    |

    சென்னை : காதல் வந்துவிட்டால் கையெழுத்து அழகாகும்... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரெண்டும் உயிர் கொள்ளும் காதலித்துப்பார்... என கவிஞர் வைரமுத்து அழகாக கவி பாடி இருப்பார்.

    மெய் மறந்து காதலில் திழைத்து... காதலில் உருகவைத்து மனதை வசியமாக்கி தென்றலென உருகவைத்த திரைப்படம் தான் காதல் கோட்டை.

    வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள்... கிழக்கு ஐரோப்பாவிற்கு பறக்கும் தலவலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள்... கிழக்கு ஐரோப்பாவிற்கு பறக்கும் தல

    இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தை பற்றி ஓர் ஸ்பெஷல் பார்வை ...

    அஜித் தேவயாணி

    அஜித் தேவயாணி

    1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல் கோட்டை. இப்படத்தில் அஜித், தேவயாணி, ஹீரா, கிரண், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார்.

    புது அனுபவம்

    புது அனுபவம்

    ரோமியோ ஜூலியட் காதல், அம்பிகாபதி அமராவதி காதல்,மோதலில் தொடங்கும் காதல், பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் காதல் என பல காதல்களை பார்த்த நமக்கு, பார்க்காமல் காதல் ஒரு வித்தியாசமாகவும், ஒரு புதுவித அனுபவத்தையும் தந்தது.

    பார்க்காமல் காதல்

    பார்க்காமல் காதல்

    ரயிலில் தொலையும் சர்டிஃபிகேட்டில் அஜித், தேவயாணி இருவரின் மனமும் தொலைகிறது. கடிதத்தில் நன்றி கூறி தொடங்கிய காதல், முகம் தெரியாத அஜித்தின் இனம் புரியாதை காதலை புகுத்தி இறுதியில் காதலுக்கு கோட்டை கட்டுகிறது.

    ஹீரோ

    ஹீரோ

    அஜித்தின் பணக்கார முதலாளியான ஹீராவின் காதலை புறம் தள்ளும் போதும், பார்க்காத காதலியை தலையில் வைத்து கொண்டாடி இறுதியில் வேலையை இழக்கும் போதும், அட இதுதாண்டா தல நடிப்பு என்று பல காட்சிகளில் உச்சுக்கொட்ட வைத்துள்ளார் அஜித்.

    காதலர்களுக்கு பிடித்த பாடல்

    காதலர்களுக்கு பிடித்த பாடல்

    தேவாவின் இசையில் நலம் நலமறிய ஆவல்... இன்று வரை காதலர்களின் பிடித்தமான பாடல்களில் ஒன்றாக உள்ளது. ஒரு பக்கம் மெலடி மற்றொரு பக்கம் ஆட்டம் போடவைத்த வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா... மொட்டு மொட்டு மலராத மொட்டு என தான் கற்ற அத்தனை வித்தைகளையும் இப்படத்தில் புகுத்தி இருப்பார் தேவா.

    என்றும் பெருமை பேசும்

    என்றும் பெருமை பேசும்

    வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித்துக்கு இப்படம் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. அழகான காதலை நயமாக சொல்லிய அகத்தியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது. காதலையும் சினிமாவையும் எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் திரைப்படமாக காதல் கோட்டை என்றும் நிலைத்து நின்று அதன் பெருமை பேசும்.

    Read more about: kadhal kottai
    English summary
    25 years of kadhal kottai special story
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X