27 வயசு தான் ஆகுது.. தற்கொலை செய்து கொண்ட நடிகை.. சூசைட் லெட்டர்ல என்ன தெரியுமா எழுதியிருக்காங்க?

தென் கொரியா: இளம் நடிகை யூ ஜூ யூன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தென் கொரிய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தென் கொரிய நடிகையான இவர் தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்றும் தனது பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு எழுதிய தற்கொலை கடிதம் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி என்ன ஆச்சு இந்த இளம் நடிகைக்கு இப்படியொரு விரக்தியான முடிவை எடுத்து விட்டாரே என சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொரிய நடிகை தற்கொலை

கொரிய நடிகை தற்கொலை

தென் கொரியவை சேர்ந்த இளம் நடிகையான Yoo Joo-eun கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தொடர்ந்து தென் கொரியாவில் ஏகப்பட்ட நடிகைகள் தற்கொலை செய்து வருவது புரியாத புதிராகவே உள்ளது. 27 வயதே ஆகும் இந்த இளம் நடிகையின் குடும்பத்தார் வெளியிட்டுள்ள சூசைட் நோட் அதை விட புதிராக உள்ளது.

தற்கொலை கடிதம்

தற்கொலை கடிதம்

பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் வரும் கருணாகரன் கதாபாத்திரத்தை போலவே தற்கொலையை தான் விரும்பி செய்துள்ளதாகவும், இதுவரை சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். என் பிரிவால் யாரும் அழ வேண்டாம். அம்மா, அப்பா, அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் என விசித்திரமாக தற்கொலை கடிதத்தை எழுதி விட்டு உயிரிழந்துள்ளார் இந்த தென் கொரிய நடிகை.

அம்மா, அப்பா மன்னிச்சிடுங்க

அம்மா, அப்பா மன்னிச்சிடுங்க

என்னுடைய இழப்பு உங்களை நிச்சயம் பாதிக்கும். ஆனால், இந்த முடிவை எடுத்ததற்காக நான் வருத்தப்படவில்லை. கடவுள் நல்லவர் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார் சொர்கத்திற்குத் தான் செல்வேன். அம்மா, அப்பா மற்றும் என்னுடைய அண்ணன் எனது இந்த முடிவால் நீங்க தான் ரொம்ப கஷ்டப்படுவீங்க என்னை மன்னிச்சுடுங்க என எழுதி வைத்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு நன்றி

ஆசிரியர்களுக்கு நன்றி

மேலும், தனக்கு நல்ல கல்விக் கொடுத்து நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு அந்த தற்கொலை கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார் யூ ஜூ யூன். இத்தனை இளம் வயதில் தான் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். இனி வாழ்வதற்கு ஒன்றுமில்லை என எழுதி விட்டு சாகும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை என ரசிகர்கள் குழம்பி உள்ளனர். உண்மையான காரணத்தை சொல்லாமல் மறைத்து இப்படி எழுதி வைத்துள்ளாரா? அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை தீர்வல்ல

எந்தவொரு பிரச்சனை வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றலை இந்த காலை இளைய தலைமுறையினர் அதிகளவில் இழந்து வருகின்றனர். எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல. அதுபோன்ற எண்ணங்கள் தோன்றும் நேரத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் சில நிமிடங்கள் பேசினாலும் அந்த சிக்கலில் இருந்து மீண்டு விடுவீர்கள் என பல மனநல மருத்துவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X