»   »  பாலிவுட்டின் சிறந்த 3 மோசமான படங்கள் இவைதான்

பாலிவுட்டின் சிறந்த 3 மோசமான படங்கள் இவைதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளமாகத் திகழும் பாலிவுட்டில் இருந்து மிகச்சிறந்த படங்கள் அதிகமாக வெளியாகின்றன, அதே வேளையில் மோசமான திரைப்படங்களையும் பாலிவுட் கொடுக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாலிவுட்டின் மிக மோசமான திரைப்படங்கள் என்று 3 படங்களை முக்கியமாகப் பட்டியலிட்டு உள்ளனர், பாலிவுட்டில் வெளிவரும் படங்களில் பெரும்பான்மையான படங்கள் மோசமாகத் தானே வருகின்றன.

அதில் இருந்து இந்த 3 படத்தை மட்டும் மோசமான படம் என்று எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது, இந்தப் படங்கள் எந்த வகையில் மோசமாகத் திகழுகின்றன என்பதை காரண காரியத்தோடு கீழே ஆராயலாம்.

உலகத்தின் சிறந்த மோசமான படங்கள்

உலகத்தின் சிறந்த மோசமான படங்கள்

விக்கிபீடியா உலகத்தின் சிறந்த மோசமான படங்களை தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் வெளியிட்டது, அதில் பாலிவுட்டில் இருந்து ராம் கோபால் வர்மாவின் ஆக், மச்சிலி ஜல் கி ராணி ஹை மற்றும் ஹம்சக்கல்ஸ் ஆகிய 3 படங்களும் இடம்பிடித்துள்ளன.

எந்த வகையில் இவை மோசமான படங்கள்

எந்த வகையில் இவை மோசமான படங்கள்

சிறந்த நடிகர்கள், மிகப்பெரிய பட்ஜெட், கடின உழைப்பு மற்றும் திறமை இவை அனைத்துமே இந்த 3 படங்களிலும் ஒருங்கிணைந்து காணப் பட்டது. ஆனால் திரைக்கதையை சொதப்பி வசூலில் மகா மட்டமாக தரை இறங்கிய விதத்தில் இந்த 3 படங்களும் முன்னணியில் இருக்கின்றன. போட்ட பணத்தில் கால்வாசியைக் கூட இந்த 3 படங்களும் வசூலிக்கவில்லை என்பதுதான் கொடுமையின் உச்சகட்டம்.

ஆக்

ஆக்

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் 2007 ம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆக், முதலில் ராம் கோபால் வர்மா கி ஆக் என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் பெயர் மாற்றம் செய்யப் பதட்டது படம். மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமான ஷோலே படத்தை மீண்டும் எடுக்க முயற்சித்து அதில் மாபெரும் தோல்வி கண்டார் ராம் கோபால் வர்மா.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம்

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம்

அமிதாப் பச்சன், மோகன்லால், அஜய் தேவ்கன், பிரஷாந்த் ராஜ் சச்தேவ் மற்றும் சுஷ்மிதாசென் போன்ற மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம்,மாபெரும் தோல்வியை சந்தித்தது.

மொத்த வசூல் தொகை 11 கோடி

மொத்த வசூல் தொகை 11 கோடி

உலகம் முழுவதும் வெளியாகிய இந்தத் திரைப்படம் மொத்தம் வசூலித்த தொகை வெறும் 11 கோடி மட்டுமே, இன்றுவரை பாலிவுட்டின் மோசமான திரைப்படம் என்ற பெருமையைத் தக்க வைத்துள்ளது இந்தத் திரைப்படம்.

மச்சிலி ஜல் கி ராணி கை

மச்சிலி ஜல் கி ராணி கை

பாலிவுட்டில் எத்தனையோ பேய்ப்படங்கள் வந்திருக்கின்றன, ஆனால் இந்தப் படத்தைப் போன்று வேறு எந்தப் பேய்ப்படமும் இதுவரை வந்ததில்லை. அவ்வளவு கொடூரமான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தில் பானு உதய், ஸ்வரா பாஸ்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் நடித்திருந்தனர். 2004 ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூலித்த மொத்தத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 1.35 கோடி மட்டுமே.

ஹம்சக்கல்ஸ்

ஹம்சக்கல்ஸ்

இயக்குநர் சாஜித் கானின் இயக்கத்தில் போன வருடம் வெளிவந்த திரைப்படம் ஹம்சக்கல்ஸ், மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களான சைப் அலிகான், ரித்தேஷ் தேஷ்முக், ராம் கபூர், பிபாசாபாசு, தமன்னா மற்றும் இஷா குப்தா ஆகியோர் நடித்திருந்தனர். இத்தனை பேர் நடித்தும் என்ன புண்ணியம் படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணைக் கவ்வியதுதான் மிச்சம்.

75 கோடியில் எடுக்கப்பட்டு 60 கோடியை வசூலித்த படம் இது

75 கோடியில் எடுக்கப்பட்டு 60 கோடியை வசூலித்த படம் இது

படத்தின் மொத்த பொருட்செலவு 75 கோடி ஆனால் படம் வசூலித்தது வெறும் 60 கோடிதான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களை படம் பார்க்கச் சொல்லி கேட்டுக் கொண்டும் கூட படம் ஓடவில்லை.

இதே மாதிரி தமிழ் சினிமாவில ஒரு பட்டியல் போட்டா... போடலாம் ஆனா எழுதறதுக்கு ஒரு மாசம் ஆகும்....

English summary
Wikipedia has come up with a "World's worst movies ever list" and three Bollywood movies have figured in it. "Aag", "Machhli Jal Ki Rani Hai" and "Humshakals".
Please Wait while comments are loading...