twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இத செய்யுங்க.. சீனாவை ஓட விடலாம்.. ’3 இடியட்ஸ்’ சோனம் வாங்சக் அதிரடி ஐடியா.. குவியுது பாராட்டு!

    |

    லடாக்: அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்துக்கு இன்ஸ்பயராக இருந்த சோனம் வாங்சக், இந்தியா - சீனா போர் நிறுத்தத்திற்கு சூப்பரான ஐடியா ஒன்றை கூறியுள்ளார்.

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், மாதவன், கரீனா கபூர் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் 3 Idiots.

    இன்ஜினியரிங் மாணவர்களை மையமாக வைத்து உருவான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    பிரெஷர் குக்கர் இல்லை

    பிரெஷர் குக்கர் இல்லை

    மாணவர்களின் மூளை ஒன்றும் பிரெஷர் குக்கர் இல்லை, அவர்களை மார்க் வாங்கும் மெஷின்களாக பார்க்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதனை கண்டறிந்து அவர்களுக்கு பிடித்த துறையில் அவர்களை சிறக்க வைக்க வேண்டும். இதைத் தான் கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் செய்ய வேண்டும் என்பதை அந்த படம் வலியுறுத்தியிருக்கும்.

    ரியல் வாங்குடு

    ரியல் வாங்குடு

    3 இடியட்ஸ் படத்தில் இன்டெலிஜன்ட்டான இன்ஜினியர் புன்சக் வாங்குடு கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருப்பார். ஆனால், அந்த கதாபாத்திரம் கற்பனை அல்ல என்றும், உண்மையிலேயே லடாக்கில் இருக்கும் அறிவாளி இன்ஜினியரான சோனம் வாங்சக் தான் அந்த கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன் என்றும் அமீர்கான் ரிவீல் செய்திருந்தார்.

    விஜய் நடிப்பில்

    விஜய் நடிப்பில்

    3 இடியட்ஸ் படத்தின் அபாரமான வெற்றியை பார்த்த இயக்குநர் ஷங்கர், தமிழில் அந்த படத்தை தளபதி விஜய்யை வைத்து இயக்கி இருந்தார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இங்கே நடிகர் விஜய் கொசக்ஸி பசப்புகழ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    சீனாவை புறக்கணிப்போம்

    இந்நிலையில், ரியல் வாங்குடுவான சோனம் வாங்சக், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவுக்கு எதிராக சீனா போர்க் கொடி தூக்கி உள்ள நிலையில், ராணுவம் ஒரு பக்கம் சமாளிக்கட்டும், இந்திய மக்களாகிய நாமும் இந்த போரில் பங்கேற்க முடியும். வெரி சிம்பிள், மேட் இன் சைனா பொருட்களை புறக்கணியுங்கள் எனக் கூறியுள்ளார்.

    ஆடிப் போயிடும்

    ஆடிப் போயிடும்

    சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை இந்தியர்கள் பயன்படுத்துவதால், சீனாவின் பொருளாதாரம் பெருகி, ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. சீனாவின் சாஃப்ட்வேர், சீன பொருட்கள், சீன ஆப்களை ஒரு வாரம் புறக்கணித்து பாருங்க, இந்தியா - சீனா போருக்கான பேச்சே அப்புறம் இருக்காது எனக் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் மேட் இன் இந்தியா, ஆத்மநிர்பார் திட்டங்களை ஆதரிப்போம் எனக் கூறியுள்ளார்.

    English summary
    Sonam Wangchuk, the man who inspired 3 Idiots, has taken upon himself to advice Indians on how to win a war against China on two fronts, first, through Army and second, through people's boycott of Chinese companies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X