Vijay campaign: விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல்.. குழந்தைகள் உட்பட மக்கள் பலி.. எங்கும் மரண ஓலம்
சென்னை: கரூரில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி அவர்கள் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே 6 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. திருச்சி, சேலத்தில் இருந்து கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் ர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் கடந்த 13 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பினை நடத்தி வருகிறார். சனிக்கிழமை தோறும் மக்களை சந்திக்கும் விஜய் இன்று பிற்பகலில் நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் வழியிலேயே 6 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 40 உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல எண்ணிக்கை உயருமா?: கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் அவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து, திருச்சியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வந்த விஜ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











