»   »  ஆச்சர்யம் ஆனால் உண்மை... முதன்முறையாக ராம்கோபால் வர்மா படத்திற்கு யு சர்டிபிகேட் !

ஆச்சர்யம் ஆனால் உண்மை... முதன்முறையாக ராம்கோபால் வர்மா படத்திற்கு யு சர்டிபிகேட் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள 365 டேஸ் என்ற தெலுங்குப் படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.

உண்மைச் சம்பவங்களைப் படமாக்கி சர்ச்சைக்குப் பேர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவரது படங்களில் தாதா, ரவுடி, ரத்தம் என வன்முறைக் காட்சிகள் மிகுந்திருக்கும். இல்லாவிட்டால் காதல், ரொமான்ஸ் என கிளுகிளுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சுமார் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார் ராம் கோபால் வர்மா. இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 60க்கும் அதிகமான படங்களை அவர் இயக்கியுள்ளார்.

முதன்முறையாக...

இதுவரை ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே, வயது வந்தோர் மட்டும் பார்க்கும் ஏ சான்றிதழே சென்சாரில் கிடைத்தது. இந்நிலையில், அவரது புதிய படமான ‘365 டேஸ்' என்ற தெலுங்குப் படத்திற்கு முதன்முறையாக யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

காதல் கதை...

காதல் கதை...

காதல், பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் வன்முறை, ரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லையாம். இதனை ராம்கோபால் வர்மாவே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையில்லை....

என் வாழ்க்கையில்லை....

மேலும், ‘நந்து, அனைகா ஜோடியாக நடித்துள்ளனர். எனது திருமணத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகவில்லை.

இன்றைய தம்பதிகளின் கதை...

இன்றைய தம்பதிகளின் கதை...

ஆனால் எனக்கு நெருக்கமானவர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையை உள்ளடக்கிய கதை' என ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.

English summary
Ace filmmaker Ram Gopal Varma takes pride in upcoming Telugu romantic-drama "365 Days", as it happens to be the first film in his over two-decade career to have been cleared by the Central Board of Film Certification (CBFC) with a U-certificate.
Please Wait while comments are loading...