»   »  கருப்பன், ஸ்பைடர், ஹரஹர மகாதேவ்கி... ஆயுத பூஜை ஸ்பெஷல் படங்கள்!

கருப்பன், ஸ்பைடர், ஹரஹர மகாதேவ்கி... ஆயுத பூஜை ஸ்பெஷல் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு ஆயுத பூஜை ஸ்பெஷலாக கருப்பன், ஸ்பைடர், ஹரஹர மகாதேவ்கி உள்பட நான்கு படங்கள் வெளியாகின்றன.

கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 11 தமிழ்ப் படங்கள் வெளியாகின. ஆனால் எந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை. பெரும்பாலான படங்கள் வந்த சுவடே தெரியவில்லை.

இந்த நிலையில்தான், ஒரு வார இடைவெளியில் ஆயுதபூஜைக்கு நான்கு படங்கள் வெளியாகின்றன.

ஸ்பைடர்

ஸ்பைடர்

மகேஷ்பாபு - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம். தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக வந்துள்ள ஸ்பைடல், இன்றே உலகெங்கும் வெளியாகிவிட்டது. தமிழ் நாட்டிலும் அதிக அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

கருப்பன்

கருப்பன்

விஜய் சேதுபதி - தன்யா நடித்துள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்துள்ளார். ரேணிகுன்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார். நாளை மறுநாள் படம் வெளியாகிறது.

ஹரஹர மகாதேவ்கி

ஹரஹர மகாதேவ்கி

பக்கா ஏ படம் என்ற முத்திரையுடன் வெளியாகியுள்ளது ஹரஹர மகாதேவ்கி. நிக்கி கல்ராணி - கவுதம் கார்த்தி நடித்துள்ளனர். சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

நெறி

பகவதி பாலா என்ற புதியவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதை வசனம் பாடல்கள் எழுதி நடித்துள்ளார் மோகன் குமார். இவர்தான் தயாரிப்பாளரும்கூட.

English summary
Here is the list of movies those releasing as Ayutha Pooja special

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil