»   »  தேர்தல் வாரம்.... நான்கு படங்கள் ரிலீஸ்... பார்க்கத் தயாரா மக்களே?

தேர்தல் வாரம்.... நான்கு படங்கள் ரிலீஸ்... பார்க்கத் தயாரா மக்களே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்த வாரம் தமிழகத்தில் முக்கியமான தேர்தல் தொடர்பான பணிகள் (வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை) நடைபெறுகிற சமயத்தில் தமிழ் சினிமாவில் இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகவுள்ளன.

பொதுவாக தேர்தல் வாரமென்றால் படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைப்பார்கள் அல்லது குறைத்துவிடுவார்கள். ஆனால் இந்த முறை ஏதோ ஒரு தைரியத்தில் நான்கு படங்களை வெளியிடுகிறார்கள்.


கோ 2, பென்சில், உன்னோடு கா, ஜம்புலிங்கம் 3டி ஆகிய இந்த நான்கு படங்களுமே ஓரளவுக்கு பிரபலமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கோ 2

கோ 2

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றிப் பெற்ற கோ படத்தின் தொடர்ச்சி என்று கோ 2வை வெளியிடுகிறார்கள். இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடித்துள்ளனர்..


பென்சில்

பென்சில்

ஜிவி பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகவிருந்த படம் இந்த பென்சில். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடித்த இரண்டு படங்கள் வந்து, அவரையும் முக்கிய ஹீரோக்கள் வரிசையில் வைத்துவிட்டன. மிகத் தாமதமாக இப்போதுதான் ரிலீசாகிறது பென்சில்.


உன்னோடு கா

உன்னோடு கா

பஞ்சாமிர்தம் படத்துக்குப் பிறகு அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இரண்டாவது படம் உன்னோடு கா. ஆரி நாயகனாக நடித்துள்ளார். ஆர்கே இயக்கியுள்ளார்.


ஜம்புலிங்கம்

ஜம்புலிங்கம்

கோடையில் குழந்தைகளைக் குறிவைத்து வருகிறது ஜம்புலிங்கம் 3 டி படம். ஹரி ஹரீஷ் இயக்கியுள்ளனர். கோகுல்நாத், அஞ்சனா, சுகன்யா மற்றும் பல ஜப்பானிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
கூட்டம் வருமா?

கூட்டம் வருமா?

இந்தப் படங்கள் எந்த மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பதைக் கணிக்க முடியவில்லை. காரணம் தேர்தல் களத்தின் சுவாரஸ்யமே இப்போது மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக உள்ளது. வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவு, புதிய அரசு அமைவது போன்ற நிகழ்வுகளில் பாமரர்களும் கவனம் செலுத்தும் சூழலில் இத்தனைப் படங்கள் ரிலீசாவது சரிதானா? என்ற கேள்வியை பாக்ஸ் ஆபீஸில் எழுப்பி வருகின்றனர்.


English summary
There are 4 new Tamil movies, Ko2, Pencil, Jambulingam 3D and Unnodu Ka are releassing this week amidst TN Assembly elections.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil