Don't Miss!
- News
அடேங்கப்பா.. 6 கோடி வருசம் பழசாம்! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்த ஸ்டாப் 500 கோடி தான்.. பொன்னியின் செல்வன் இதுவரை செய்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவுக்கு இரண்டு 400 கோடி வசூல் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் கிடைத்துள்ளன.
கமல்ஹாசனின் விக்ரம் படம் நடத்திய வசூல் வேட்டையை விட அதிவிரைவாக 400 கோடி கிளப்பில் இணைந்துள்ளது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.
செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.
சினிமாவுக்கு
வரும்
ரோஜா
மகள்..
எவ்வளவு
க்யூட்டா
இருக்காங்க!

2.0, விக்ரம், பொன்னியின் செல்வன்
ரஜினிகாந்தின் 2.0 படம் தமிழ் சினிமாவில் முதன் முறையாக 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த படம் என்கிற லிஸ்டில் உள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் படம் 400 கோடி கிளப்பி இணைந்தது. விக்ரம் படம் வெளியாகி சில மாதங்களிலேயே வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் 11 நாட்களிலேயே 400 கோடியை கடந்துள்ளது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி உள்ளது.

பொற்காலம்
தமிழர்களின் பொற்காலமாக சோழர்களின் ஆட்சி இருந்தது எனக் கூறப்படும் நிலையில், சோழர் கொடியை பறக்க விட்டு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 400 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ள நிலையில், தமிழ் சினிமாவுக்கும் இந்த ஆண்டு பொற்காலமாகவே மாறியுள்ளது என்று திரையுலகினர், தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகளவில் ரீச்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் எனும் 5 மொழிகளில் பான் இந்தியா மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் மாதிரி 1000 கோடி வசூலை கடக்குமா? என்று எதிர்பார்த்தால் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பெரிதாக ரீச் கிடைக்கவில்லை. ஆனால், அதே சமயம் இதுவரை செய்யாத அளவுக்கு உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

மொத்த வசூல்
தமிழ்நாட்டில் மட்டுமே 190 கோடி அளவுக்கு வசூல் செய்து நம்பர் ஒன் வசூல் செய்த படம் என மாறி உள்ள பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 11 நாட்களில் 450 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்தி, சியான் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த இந்த படம் இத்தனை பெரிய வசூலை அடைந்த நிலையில், அனைவருமே சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளனராம்.

அடுத்த ஸ்டாப் 500 கோடி
பொன்னியின் செல்வன் தீபாவளி கடந்தும் திரையரங்கில் நன்றாகவே ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரமும் படத்தின் வசூல் இதே நிலையில் சென்று கொண்டிருந்தால் நிச்சயம் மேலும், ஒரு 100 முதல் 120 கோடி வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஸ்டாப் நிச்சயம் 500 கோடி தான் என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் அடித்து சொல்கின்றனர்.