»   »  2015: விவசாயிகள் பிரச்சினையைப் பேசிய 49 ஓ, கத்துக்குட்டி.. கங்கிராட்ஸ்!

2015: விவசாயிகள் பிரச்சினையைப் பேசிய 49 ஓ, கத்துக்குட்டி.. கங்கிராட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு திரைத்துறையில் இரண்டு கவனிக்கத்தக்க படங்கள் வெளியாகின. இரண்டுமே விவசாயிகளின் பிரச்சினையைப் பேசியவை. வெறும் பிரச்சாரமாக இல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்தப் படங்கள் அமைந்தன.

அவை கவுண்டமணியின் 49 ஓ, இன்னொன்று மீத்தேன் திட்டத்தை தடுக்க உதவிய கத்துக்குட்டி.

49 ஓ

49 ஓ

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக விவசாயிகளை எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள் என்பதை நெத்தியடியாகச் சொன்ன படம் 49 ஓ. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை அமைத்திருந்தால், இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாகவே 49 ஓவைக் கொண்டாடியிருக்கலாம்.

கவுண்டமணி

கவுண்டமணி

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கவுண்டமணிதான். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நடிக்காமல், பிடிவாதமாக பல வாய்ப்புகளை மறுத்துவந்த மனிதர், ஒரு சரியான கதையைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவே களமிறங்கினார். மக்களைக் கவர்ந்தார்.

கத்துக்குட்டி

கத்துக்குட்டி

மீத்தேன் வாயு எடுப்பதற்காக தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளையே மலட்டு மண்ணாக்கும் திட்டத்தை அம்பலப்படுத்த எடுக்கப்பட்ட படம். கலகலப்பான காட்சிகள், பார்ப்பவர்களுக்கு மீத்தேன் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியான வசனங்கள் என மனம் கவர்ந்தார் புதிய இயக்குநர் இரா சரவணன்.

இந்த மாதிரிப் படங்கள்தான் இன்றைய தேவை

இந்த மாதிரிப் படங்கள்தான் இன்றைய தேவை

கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் அழித்து வரும் இந்த சூழலில், விவசாயத்தின் முக்கியத்துவம், எதிர்காலத்தில் எந்த மாதிரி ஆபத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்த்தக் கூடிய படங்கள்தான் இப்போதைய தேவை.

புதியவர்கள்

புதியவர்கள்

பொழுதுபோக்கோடு, சமூகப் பொறுப்பையும் உணர்த்தும் 49 ஓ, கத்துக்குட்டி ஆகிய படங்களைத் தந்தவர்கள் மூத்த இயக்குநர்கள் அல்ல... இளைஞர்கள். முதல் பட இயக்குநர்கள். சினிமாவில் ஜெயித்தவர்கள், அந்த சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்கும் சூழலில், தங்கள் முதல் படங்களிலேயே சவாலான விஷயங்களை, பொறுப்புணர்வுடன் முன்வைத்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!

English summary
49 O and Kaththukkutti are two notable movies released in year 2015 and exposed many issues of farmers and agriculture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil