‘தளபதி67‘ தரமான சம்பவம் லோடிங்..ஒன்னு இல்ல..ரெண்டு இல்ல..ஆறு வில்லன்..லோகேஷின் அடுத்த அதிரடி!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்க இருப்பதாக மிரட்டலான தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் தற்போழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போழுது ஐந்தாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு அக்டோபரில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தில் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

விக்ரம்

விக்ரம்

கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இந்திய அளிவில் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்டார். விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றதால், கமல் லோகேஷ் கனகராஜூக்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

தளபதி 67

தளபதி 67

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 வில்லன்கள்

6 வில்லன்கள்

இந்நிலையில், தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் 3 வில்லன்கள் யார் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட வில்லன்கள் இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் போன்றவர்கள் வில்லனாக நடித்திருந்தார்கள் அதே போல, விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, செம்பன் வினோத், ஹரீஷ் பெராடி உள்ளிட்டவர்கள் வில்லன்களாக இருந்தனர். தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் என தகவல் வெளியாகி உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X