»   »  லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ஷோ காட்டிய விஜய்!

லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு ஸ்பெஷல் ஷோ காட்டிய விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் - நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளையில் இருக்கும் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தெறி படத்தின் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டினார் நடிகர் விஜய்.

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘தெறி' படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.


அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் மகேந்திரன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.


60 children enjoy the special show of Vijay's Theri

இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.


இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளையில் இருக்கும் 60 குழந்தைகள் ‘தெறி' படத்தை பார்க்க விரும்பினர். உடனே விஜய்க்கு போன் செய்து பேசிய லாரன்ஸ், குழந்தைகள் படத்தை பார்க்க பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். படத்தைப் பார்த்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.


‘குழந்தைகளை படம் பார்க்க வைத்து மகிழச் செய்த என்னுடைய நண்பர் விஜய்க்கு மிகவும் நன்றி‘ என்று லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

English summary
60 children from Raghava Lawrence trust have enjoyed the special show of Vijay's Theri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil