For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினியின் ஜெயிலர் ரூட்டில் KH234... கமல், மணிரத்னம் காம்போவில் 7 பான் இந்தியா ஸ்டார்ஸ்?

  |

  சென்னை: உலகநாயகன் கமல் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் அதிரிபுதிரியான வரவேற்பில் மெகா ஹிட் அடித்தது.

  பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் வசூலித்த விக்ரம், கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட பலரது நடிப்பில் மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகியிருந்தது.

  இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்தப் படம் கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை ஆகியவற்றால் பாதியிலேயே டிராப் ஆகியிருந்தது.

  இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பும் நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. தற்போது அந்தப் படம் பற்றிய சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

  சினிமாவின் என்சைக்ளோபீடியா..உலகநாயகன் பிறந்த நாள் ஸ்பெஷல் ரவுண்டப்!சினிமாவின் என்சைக்ளோபீடியா..உலகநாயகன் பிறந்த நாள் ஸ்பெஷல் ரவுண்டப்!

   கம்பேக் கொடுத்த உலகநாயகன்

  கம்பேக் கொடுத்த உலகநாயகன்

  விக்ரம படத்தின் வெற்றியால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார் கமல். உலக நாயகன் கமலின் இந்த வெறித்தனமான கம்பேக்கால், கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், நவம்பரில் பிறந்தநாள் கொண்டாடிய கமல் தனது ரசிகர்களுக்காக அவரது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் அவர் இணையவிருப்பது உறுதியானது. கமல் - மணிரத்னம் - ஏஆர் ரஹ்மான் என மெகா கூட்டணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

   விக்ரம், ஜெயிலர் ரூட்டில் கமல் 234

  விக்ரம், ஜெயிலர் ரூட்டில் கமல் 234

  1987ல் வெளியான நாயகன் திரைப்படம் இந்திய சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல் - மணிரத்னம் கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. ஆனால், இந்தப் படத்தின் ஸ்டார் காஸ்டிங் லோகேஷ் இயக்கிய விக்ரம், ரஜினியின் ஜெயிலர் படங்களை விட மாஸ்ஸாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

   7 பான் இந்தியா ஸ்டார்ஸ்?

  7 பான் இந்தியா ஸ்டார்ஸ்?

  லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இதுவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே ரூட்டை கையில் எடுத்த ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோருடன் நடித்து வருகிறார். மல்டி ஸ்டார்ஸ் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் கமல் - மணிரத்னம் கூட்டணியும் ஒரு அல்டிமேட் பிளான் போட்டுள்ளார்களாம்.

   ரசிகர்கள் எதிர்பார்ப்பு

  ரசிகர்கள் எதிர்பார்ப்பு

  அதன்படி KH 235 படத்தில் மற்ற மொழிகளைச் சேர்ந்த 7 முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். அதில் முதல் ஆளாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் - ஷாருக்கான் இருவரும் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் ஷாருக்கான் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த முக்கியமான நடிகர்கள் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் என்ற தகவல்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

  English summary
  Mani Ratnam will direct Kamal's 234th film, the official announcement has been released. Produced by Rajkamal, Madras Talkies, and Red Giant, this film will release in 2024. AR Rahman is composing the music for this film. In this case, It has been reported that 7 leading actors including Shah Rukh Khan will act in KH 234.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X