»   »  ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட ஏழு புதுப் படங்கள்

ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட ஏழு புதுப் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் ஏழு புதிய படங்களைத் தயாரிக்கிறது.

நிறுவனத்தின் பெயர் பாஃக்ஸ் அண்ட் க்ரோவ் ஸ்டூடியோ.

7 new movies launched at a time

1.ஜனவரி மழையில் ஒரு ஹாய்

2.கடவுள் இருக்கான் குமாரு

3.லந்து

4.கொள்ளக் கூட்ட பாஸ்

5.வட்டச் செயலாளர் வண்டு முருகன்

6.நீங்க புடுங்கிற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணிதான்

7.கோக்

இந்த 7 படங்களின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இந்த ஏழு படங்களும் காமெடியை பின்னணியாகக் கொண்டு குறுகிய கால தயாரிப்பில் சிறு பட்ஜெட் படங்களாக தயாராகவுள்ளன.

படங்களின் கதையையும் ராஜேஷ் கண்ணன் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவற்றில் ‘ஜனவரி மழையில் ஒரு நாள்' மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். ஏற்கெனவே இவர் பெருமான் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

இதுகுறித்து ராஜேஷ் கண்ணன் பேசுகையில், "எனக்கு சினிமா என்றால் உயிர். ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். பல வேலை பார்த்திருக்கிறேன்.

சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அஜித் எனக்கு நல்ல நண்பர். ஒருநாள் கேட்டார். வாழ்க்கையில் என்ன ப்ளான் வச்சிருக்கேன்னு.

நான் பல வேலை செய்வதை சொன்னேன். இப்படி பலவற்றில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு நிறுவனம் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் தேவை விசிட்டிங் கார்டு என்று தெளிவு படுத்தி தொடங்கி வைத்தார்.

அதை மறக்க மாட்டேன். நான் பலரிடம் கதை சொல்லி 52 கதைகள் உருவாக்கிவிட்டேன். ஒருகட்டத்தில் சலித்துவிட்டு இம் முயற்சியில் ஈடுபட முடிவு செய்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை எல்லாமே மேட் இன் ப்ரண்ட்ஷிப் என்றுதான் சொல்வேன். புதியதை வரவேற்கத் தயாராக இருக்கும் ரசிகர்களை நம்பி இறங்கியிருக்கிறோம்," என்றார்.

English summary
Recently a new production company titled Fox and Crow launched 7 new movies at a time.
Please Wait while comments are loading...