படம் வெற்றி...‘கோ’ பட வெற்றியால் குழம்பினாரா ஜீவா?-இயக்குநரின் பதிவு

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியாகி வெற்றி நடைப்போடும் 83 திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடித்து அசத்தியுள்ள ஜீவாவுக்கு இயக்குனர் வசந்தபாலன் வித்தியாசமான வேண்டுகோளை வைத்துள்ளார்.

Recommended Video

'MS Dhoni அறிஞர் அண்ணா மாதிரினா, 83 தந்தை பெரியார் மாதிரி' | 83 Public Review

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராகவும் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பிரமாதமான நடிப்பை வெளிக் காட்டி முத்திரை பதித்து வருபவர் ஜீவா. கற்றது தமிழ், ராம் , ஈ என வித்தியாசமான படைப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்தவர் அதன் பிறகு தொடர்ந்து கமர்ஷியல் படங்களின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜீவாவின் திரை வாழ்க்கையில்

ஜீவாவின் திரை வாழ்க்கையில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தனித்துவமான நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் ஜீவா. தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டி அசத்தி வரும் இவர் தற்போது 83 என்கிற படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த ரோலில் நடித்துள்ளார். தொடர்ந்து கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜீவா ஆரம்ப கட்டத்தில் நடித்த திரைப்படங்கள் வித்தியாசமான கதை களத்தில் வெளியானது.

அவ்வாறு வெளியான கற்றது தமிழ், ராம், ஈ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கியது. மேலும் இன்றுவரை ஜீவாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படங்களில் இந்த மூன்று படங்களும் உள்ளது என்றால் அது மிகையாகாது

ஆக்ஷன் ஹீரோவாக

ஆக்ஷன் ஹீரோவாக

இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா ஸ்டைலிஷான ஹீரோவாக நடித்த திரைப்படம் கோ. முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜீவாவின் புதுவிதமான நடிப்பு திறமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் கோ திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது இதன் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ஜீவா உருவானார்.

உலக கிரிக்கெட் போட்டியில்

உலக கிரிக்கெட் போட்டியில்

சமீபகாலமாகவே ஜீவா நடித்து வெளியான திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த 83 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம், உலக கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழைய ஜீவாவா புதுசா வரணும்

பழைய ஜீவாவா புதுசா வரணும்

83 படத்தில் அவர் நடித்த காட்சிகளை பார்க்கும் அனைவரையும் ஜீவாவின் கதாபாத்திரத்தை பாராட்ட வைத்துள்ளது. இந்த நிலையில் 83 படத்தை பார்த்த இயக்குனர் வசந்தபாலன் ஜீவாவின் பிரமாதமான நடிப்பை வியந்து பாராட்டியதோடு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

கோ படம் வெற்றி குழப்பியதா?

கோ படம் வெற்றி குழப்பியதா?

அதாவது ஆரம்ப கட்டத்தில் ஜீவாவின் நடிப்பில் வெளியான கற்றது தமிழ், ராம், ஈ போன்ற திரைப்படங்கள் இவரது தனித்தன்மையை காட்டியது ஆனால் கோ படத்தின் வெற்றி அவரை குழப்பி வேறு பாதைக்கு சென்று விட்டது என்றும் மீண்டும் பழைய ஜீவாவா புதுசா வரணும் எனவும் ஜீவாவுக்கு இயக்குனர் வசந்தபாலன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X