»   »  9 நாயகிகள் கதிகலங்க வைக்கும் கவர்ச்சியில் ‘இளமை ஊஞ்சல்’

9 நாயகிகள் கதிகலங்க வைக்கும் கவர்ச்சியில் ‘இளமை ஊஞ்சல்’

Posted By:
Subscribe to Oneindia Tamil
9 ஹீரோயின்கள் நடிக்க ஒரு படம் தயாராகிறது. படத்துக்குப் பெயர் இளமை ஊஞ்சல்.

ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மங்கை அரிராஜன் இயக்குகிறார்.

அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. திடுக்கிடும் சம்பவங்களும், கவர்ச்சி காட்சிகளும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகள் படம் முழுக்க திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறார்களாம்.

"இந்தப் படத்தின் கதைக்கு கட்டாயம் கவர்ச்சி தேவை என்பதால், இதில் நடித்திருக்கும் நடிகைகள் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு, காட்சிகளுடன் முழுமையாக ஒன்றிப் போய், படம் பார்ப்போரைக் கிறங்க வைக்கும் அளவிற்கு தங்களின் உடலழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்," என்கிறார் இயக்குநர் அரிராஜன் தெரிவித்துள்ளார்.

ஒகனேக்கல், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், மூணாறு ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

கார்த்திக் பூபதிராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு : ஜே.ஜி கிருஷ்ணன்.

முடிவடையும் நிலையில் இருக்கும் இந்த இளமை ததும்பும் படத்தை பிரபல பட வினியோகஸ்தர் எஸ்.ஆர். மனோகரன் தயாரிக்கிறார். மங்கை அரிராஜன் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

"2012 ஆம் ஆண்டிலேயே இளம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளப்போகும் படம் 'இளமை ஊஞ்சல்' தான்" என்று கூறுகிறார்கள் இயக்குனர் மங்கை அரிராஜனும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். மனோகரனும்.

English summary
There are 9 heroines are going to appear in Mangai Harirajan's new film tiled Ilamai Oonjal.
Please Wait while comments are loading...