twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    90ஸ் சின்னதிரை நட்சத்திரங்கள் ரீ-யூனியன்: அட இதுல யார்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு நீங்களே பாருங்க

    |

    சென்னை: சினிமா நட்சத்திரங்கள் மாதிரியே சின்னதிரை நடிகர்களும் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளனர்.

    தமிழில் தொன்னூறுகளின் காலக்கட்டத்தில் ஏராளமான நாடகங்கள் ஒளிபரப்பாகின.

    அதில் நடித்த சின்னதிரை நட்சத்திரங்கள் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடி மகிழ்ந்துள்ளனர்.

    ஆடையை கழட்டி நடிச்ச என்ன தப்பு..கதைக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன்..அமலா பால் பேட்டி!ஆடையை கழட்டி நடிச்ச என்ன தப்பு..கதைக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன்..அமலா பால் பேட்டி!

    கறுப்பு வெள்ளை கால ஒலியும் ஒளியும்

    கறுப்பு வெள்ளை கால ஒலியும் ஒளியும்

    கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்த காலக்கட்டங்களில் தூதர்சனைத் தவிர மற்ற பொழுதுப்போக்கு சேனல்கள் கிடையாது. அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை தினங்கலில் ஒளிப்பரப்பாகும் 'ஒலியும் ஒளியும்' போன்ற ஒருசில நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும். மேலும், தேர்ந்தெடுத்த சில நாடகங்கள் மட்டும் ஒளிப்பரப்பபட்டன. இந்த நிலைமை தொன்னூறுகளுக்குப் பிறகு மாறத் தொடங்கியது.

    90களில் தொடங்கிய சீரியல் அட்ராசிட்டி

    90களில் தொடங்கிய சீரியல் அட்ராசிட்டி

    தொன்னூறுகளில் இருந்து கேபிள் டீவியின் வருகை புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பகாலத்தில் சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி ஆகியவை தங்களது சேவைகளைத் தொடங்கியது. சினிமா நிகழ்ச்சிகள் தவிர மக்களை அதிகம் சென்றடைய வேண்டும் என சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டன. சன், ராஜ், விஜய் தொலைக்காட்சிகள் இதில் முன்னோடிகளாகத் திகழ்ந்தன. எல்லாமே மெகா தொடர்களாக ஒளிப்பரப்பாகின.

    அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள்

    அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள்

    குடும்பப் பின்னணியில் அதிகமான சீரியல்கள் வரத் தொடங்கின. அதில், சக்தி, மெட்டி ஒலி, சித்தி, நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், கோலங்கள் என பல நாடகங்களை குறிப்பிடலாம். அதேபோல், க்ரைம் திரில்லரில் 'மர்ம தேசம் - விடாது கருப்பு' நாடகம் பலருக்கும் ஃபேவைரைட்டாக இருந்தது. சேத்தன் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல் காமெடிக்கு சின்ன பாப்பா பெரிய பாப்பா, ரமணி VS ரமணி, கலகலப்பான தொடர்களாக 'பட்டர்ஃளை', 'கணா காணும் காலங்கள்' போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

    20 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன்

    20 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன்

    இதுபோன்ற சீரியல்கள் மூலம் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் மக்களிடம் பிரபலமாகினர். போஸ் வெங்கட், தீபா வெங்கட், நீலிமா, சேத்தன், தேவதர்ஷினி, விஜய் ஆதிராஜ், வெங்கட் உள்ளிட்ட பலரை பட்டியலிடலாம். இவர்களில் சிலர் சினிமாவிற்கும் இன்னும் பலர் வேறு துறைகளிலும் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.

    அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள்

    அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள்

    குடும்பப் பின்னணியில் அதிகமான சீரியல்கள் வரத் தொடங்கின. அதில், சக்தி, மெட்டி ஒலி, சித்தி, நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், கோலங்கள் என பல நாடகங்களை குறிப்பிடலாம். அதேபோல், க்ரைம் திரில்லரில் 'மர்ம தேசம் - விடாது கருப்பு' நாடகம் பலருக்கும் ஃபேவைரைட்டாக இருந்தது. சேத்தன் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல் காமெடிக்கு சின்ன பாப்பா பெரிய பாப்பா, ரமணி VS ரமணி, கலகலப்பான தொடர்களாக 'பட்டர்ஃளை', 'கணா காணும் காலங்கள்' போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

    20 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன்

    20 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன்

    இதுபோன்ற சீரியல்கள் மூலம் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் மக்களிடம் பிரபலமாகினர். போஸ் வெங்கட், தீபா வெங்கட், நீலிமா, சேத்தன், தேவதர்ஷினி, விஜய் ஆதிராஜ், வெங்கட் உள்ளிட்ட பலரை பட்டியலிடலாம். இவர்களில் சிலர் சினிமாவிற்கும் இன்னும் பலர் வேறு துறைகளிலும் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.

    ரீயூனியனில் பங்கேற்ற நட்சத்திரங்கள்

    ரீயூனியனில் பங்கேற்ற நட்சத்திரங்கள்

    இந்த சந்திப்பில், கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா, அம்மு இராமசந்திரன், வெங்கட், நீலிமா, பானு பிரகாஷ், சிட்டி பாபு, போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட், ரிஷி, அஞ்சு, கணேஷ்கர், ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், KSG வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம்,, பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸவேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    வைரலாகும் புகைப்படங்கள்.

    வைரலாகும் புகைப்படங்கள்.

    நடிகைகள் எல்லோரும் சிவப்பு நிற உடையிலும், நடிகர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தும் கலந்துகொண்டனர். மேலும் அனைவரும் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அதுமட்டும் இல்லாமல் இந்த சந்திப்பு மீண்டும் பெரிய அளவில் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை குறிப்பிடும் விதமாக 'சங்கமம் தொடரும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    90's Serial actors and actresses are reunion after a long time
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X