தொடரும் சோகம்.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இளம் பாடகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்தது.

இதில் சாமானிய மக்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என ஏராளமானோர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா 3வது அலை

கொரோனா 3வது அலை

இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கலாம் என மருத்துவ நிபுணர் குழு கூறியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகி

பிரபல பாடகி

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி கொரோனாவுக்கு மரணமடைந்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் பாடகி தபு மிஷ்ரா. 36 வயதான இவர் இந்தி, வங்காள உட்பட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

குறைந்த ஆக்ஸிஜன்

குறைந்த ஆக்ஸிஜன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்ககப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென அவரது ஆக்சிஜன் அளவு 45க்கும் கீழ் குறைந்தது.

பாடகி தபு மிஷ்ரா மரணம்

பாடகி தபு மிஷ்ரா மரணம்

இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 100% வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தபு மிஷ்ரா மரணமடைந்தார்.

தந்தையும் மரணம்

தந்தையும் மரணம்

தபு மிஷ்ராவின் தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், தபு மிஷ்ராவும் உயிரிழந்துள்ளார். தபு மிஷ்ராவுக்கு எந்த இணை நோய்களும் இல்லாத நிலையில் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என குடும்பத்தினர் நம்பினர்.

திரைத்துறையினர் இரங்கல்

திரைத்துறையினர் இரங்கல்

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: covid 19 கோவிட் 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X