twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும்: லட்சுமி ராமகிருஷ்ணன் நம்பிக்கை

    டூலெட் படம் நிச்சயம் வெற்றி பெறும் என நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: ஒரு நல்ல திரைப்படம் தனக்காக நடிகர்கனை தேடிக்கொள்ளும் என இயக்குனர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்கினின் யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், ஆரோகணம், அம்மனி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    இவர் தற்போது இயக்கி வரும் படம் ஹவுஸ் ஓனர். நடிகை விஜியின் மகள் லவ்லின் இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார். பசங்க கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.

    ஹவுஸ் ஓனர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு ஜனரஞ்சகமான, அதே சமயம் நம் சிந்தனையை தூண்டும் படமாக இருக்கும் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    மனநிறைவு:

    மனநிறைவு:

    இதுகுறித்து அவர் கூறியதாவது, " வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.

    அறிமுக நாயகி லவ்லின்:

    அறிமுக நாயகி லவ்லின்:

    ‘ஆடுகளம்' கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருதத் தோன்றும். எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம்.

    நாயகன்:

    நாயகன்:

    ‘பசங்க' திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும், ‘கோலிசோடா' படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.

    ஒளிப்பதிவு:

    ஒளிப்பதிவு:

    மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர். ‘மகளிர் மட்டும்' புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர்.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்" என்று பெருமையுடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

    English summary
    "A good content oriented film earns it's actors”, says director actress Lakshmi Ramakrishnan about her upcoming future film House owner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X