»   »  தலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்

தலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்

Posted By: Super Admin
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர் போராட்டம் தலைவர் இல்லாததால் திசைமாறியது என்பது தவறு; தலைவர் இல்லாத இயக்கம்தான் நேர்மையானது; என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் கமல்ஹாஸன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

A movement does not a leader - Kamal in a press meet

விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசவும் இந்த ஜல்லிக்கட்டு புரட்சி நடந்திருக்கலாம். வேர் இதுதான். அதற்கான களமாக ஜல்லிக்கட்டு அமைந்தது.

இத்தனை பேர் இறந்த பிறகும் விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசாமல் இருப்பது நமக்கு நாமே அழிவை உருவாக்கிக்கொள்வது ஆகும்.

அதேபோல், மாணவர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று போராடுவது அவர்கள் உரிமை. அதை சரியென்றும் தவறென்றும் சொல்வதற்கு நான் யார்?

அதேபோல் பீட்டாவை தடை செய்ய வேண்தும் என்று கூறினால், வேறு ஒரு பெயரில் இன்னொரு விலங்குகள் நல அமைப்பு உருவாகும்.

ஒரு அமைப்பு வேண்டாம் என்று சொல்வதை விட, அதை ரெகுலேட் செய்வது குறித்து யோசிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசு போராட்டத்துக்கு பிறகு தன்னால் இயன்றதை சரியாக செய்தது என்பது என் கருத்து.

அதேபோல், தலைவன் இல்லாததால் போராட்டம் இறுதியில் திசைமாறியது என்று சொல்வது தவறு. தலைவனை விட, இதையெல்லாம் தொகுத்து சொல்ல ஆட்கள் இருந்தால் போதும். தலைவன் இல்லாத இயக்கம் நேர்மையான இயக்கம்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

English summary
Kamalhasan met reporters and told that a movement does not need a leader. It needs only a good editor. Students not only gave voice for jallikattu alone, but also for farmers problem too. Instead of banning Peta, we have to think about regulating animal' s welfare.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil