»   »  'பைரவா நல்லபடியா ரிலீசாகணும், ஜெயிக்கணும் சாமீ!'

'பைரவா நல்லபடியா ரிலீசாகணும், ஜெயிக்கணும் சாமீ!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கல் ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் பைரவா. படத்தின் டீசர் ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆனால் படம் குறித்து இப்போதே கலவையான பேச்சுக்கள் கிளம்பிவிட்டதுதான் விஜய்யை யோசிக்க வைத்திருக்கிறது. படக்குழுவினருக்கும் கொஞ்சம் 'பக்பக்'தான். ஏனென்றால் படத்தின் இயக்குநர் பரதன் ஏற்கெனவே விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் எடுத்தவர். அந்தப் படத்துக்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பை ஒருவரும் தரவில்லை.


A prayer for the success of Vijay's Bairava

ஆனால் சென்டிமென்ட் அது இது என எதையும் பார்க்காமல் மீண்டும் வாய்ப்பை வழங்கி தனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளார் விஜய். அந்தப் பெருந்தன்மைக்கு பங்கம் வரக்கூடாதல்லவா...


எனவே படம் நன்றாகப் போக வேண்டும்... எதிர்மறைப் பேச்சுகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகவேண்டும் என்ற வேண்டுதல்களுடன் பெரிய சிவன் கோயிலில் ஒரு யாகம் வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.


விஷயத்தைக் கேள்விட்ட தயாரிப்பாளர்களும் நல்லதுதான்... அப்படியே செஞ்சிடலாம் என ஓகே சொல்லிவிட்டார்களாம்!

English summary
The crew of Vijay's Bairava including the director are planning for a prayer at Siva Temple for the success of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil