விஜய்யுடன் இருக்கும் போட்டோ, லவ்லியான கேப்ஷன்: ட்ரெண்டாகி வருவது எஸ்ஏசியின் ட்வீட்டர் பதிவு தானா?

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகரின் ட்வீட்டர் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.

இந்தப் பதிவில் விஜய்யுடன் எஸ்ஏ சந்திரசேகர் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

மகனை தூக்கிவிட்ட தந்தை

மகனை தூக்கிவிட்ட தந்தை

கோலிவுட் ரசிகர்களின் தளபதியாக மாஸ் காட்டி வரும் விஜய்க்கு, ஆரம்ப காலங்களில் பெரும் பலமாக இருந்தது அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான். தந்தை எஸ்ஏசியும், அம்மா ஷோபனாவும் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கான வெற்றிப் பாதையையும் அவர்களே அமைத்துக்கொடுத்தனர். அதன்பின்னர் விஜய் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து, இன்று டாப் ஸ்டாராக வலம் வருகிறார்.

எஸ்ஏசி விஜயகாந்த் வெற்றிக் கூட்டணி

எஸ்ஏசி விஜயகாந்த் வெற்றிக் கூட்டணி

சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்ஏசி, போலீஸ் ஸ்டோரி, க்ரைம் திரில்லர் ஜானர்களில் படங்களை இயக்குவதில் கில்லாடி. அவரும் கேப்டன் விஜயகாந்தும் இணைந்துவிட்டால், அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்தான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி விஜயகாந்த் நடித்த படங்களில், அவரது சிறுவயது பாத்திரத்தில் விஜய்யும் நடித்திருப்பார். இயக்குநராக அசத்திய எஸ்ஏசி, தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார்.

விஜய்க்கும் எஸ்ஏசிக்கு பிரச்சினை?

விஜய்க்கும் எஸ்ஏசிக்கு பிரச்சினை?

தன் கேரியரில் பக்கபலமாக இருந்த தந்தை எஸ்ஏசியுடன், விஜய்க்கு மனவருத்தம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் படங்களில் கதைகளை கேட்பது, விஜய் மக்கள் இயக்கம், அரசியல் பயணம் என எஸ்ஏசியின் தலையீடுகள் அதிகம் இருந்ததால், தற்போது இருவருக்குள்ளும் பேச்சுவார்த்த இல்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனை உறுதிசெய்யும் விதமாக, சில நாட்களுக்கு முன், விஜய்யின் தந்தை எஸ்ஏசியின் தனது 80வது பிறந்தநாள் விழாவை, மனைவி ஷோபாவுடன் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு மகனுடன் எஸ்ஏசி

அன்பு மகனுடன் எஸ்ஏசி

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான விஜய்யின் தந்தை எஸ்ஏசி ட்விட்டரில் இணைந்துள்தாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு தனியாக ட்வீட்டர் அக்கவுண்ட் இருக்கும் நிலையில், தற்போது முதன்முறையாக ட்விட்டரில் இணைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில், விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "டிவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி, என் முதல் பதிவு அன்பு மகன் விஜய்யுடன்" என ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டு செய்துவரும் நிலையில், இது எஸ்ஏசியின் உண்மையான ட்வீட்டர் அக்கவுண்ட் தானா என கேள்வி எழுதுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X