அதகளமான போஸ்டருடன் அதிரடியான அப்டேட் கொடுத்த சலார் டீம்: ராக்கி பாய்க்கு டஃப் கொடுப்பாரா பிரபாஸ்?

ஐதராபாத்: 'கேஜிஎஃப்' படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

அதேபோல், 'பாகுபலி' படத்திற்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டாராக ஜொலித்து வருகிறார் பிரபாஸ்.

பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் 'சலார்' படத்தின் அப்டேட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ராவாக சம்பவம் செய்த ராக்கி பாய்

ராவாக சம்பவம் செய்த ராக்கி பாய்

இந்தியத் திரையுலகை சமீபத்தில் புரட்டிப் போட்ட ஒரு பெரிய சூறாவளி இருக்குமென்றால், அது ''கேஜிஎஃப்' படமாக தான் இருக்கும். 'உக்ரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் நீலை, அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 'கேஜிஎஃப்' படம் வெளியானதும், அவரின் புகழ் எங்கோ சென்றது. ராக்கி பாய் என்ற ஒரு கேரக்டரை வைத்துக்கொண்டு ராவாக சம்பவம் செய்து, ரசிகர்களை மிரட்டினார்.

கோடிகளை குவித்த கேஜிஎஃப்

கோடிகளை குவித்த கேஜிஎஃப்

யாஷ் ஹீரோவாகவும், ஸ்ரீநிதிஷெட்டி நாயகியாகவும் நடித்திருந்த 'கேஜிஎஃப்' கோலார் சுரங்கத்தின் பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்தது. படம் முழுக்க ஆக்சன் தான் என்றாலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் இயக்குநர் பிரசாந்த் நீல் செம்மையாக ஸ்கோர் செய்திருந்தார். 2018ல் வெளியான கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம், யாருமே எதிர்பாராத வகையில் கோடிகளை குவித்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்தது.

மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கேஜிஎஃப் 2

மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கேஜிஎஃப் 2

முதல் பாகமே ரசிகர்களை திக்குமுக்காடச் செய்ய, கேஜிஎஃப் படத்தின் இரண்டாவது பாகமும் அதே பிரமாண்டத்துடன் உருவானது. மீண்டும் யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணி அரங்கேற்றிய ஆக்சன் அதிரடியில், இந்தியத் திரையுலகம் இன்னும் அரண்டுதான் போனது. இந்தியா முழுவதும் ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூலித்து வெற்றி வாகை சூடியது.

பாகுபலியுடன் கூட்டணி வைத்த ராக்கி பாய்

பாகுபலியுடன் கூட்டணி வைத்த ராக்கி பாய்

'கேஜிஎஃப்' படத்தின் 3ம் பாகமும் விரைவில் உருவாகும் என பிரசாந்த் நீல் கூறியிருந்தார். இந்நிலையில், பாகுபலி படம் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்படும் பிரபாஸுடன் கூட்டணி வைத்தார் பிரசாந்த் நீல். 'சலார்' என டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படமும், 'கேஜிஎஃப்' போன்று மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பல நிறுவனம் தான், சலார் படத்தையும் தயாரிக்கிறது.

ரசிகர்களுக்கு மஜா அப்டேட் ரெடி

ரசிகர்களுக்கு மஜா அப்டேட் ரெடி

'சலார்' படம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து தரமான அப்டேட்டை கொடுக்க படக்குழு ரெடியாகவிட்டது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி 12.58 மணிக்கு, சிறப்பான 'சலார்' அப்டேட் காத்திருப்பதாக ரசிகர்களுக்கு லீட் கொடுத்துள்ளது. இது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராகவோ அல்லது கேரக்டர் இண்ட்ரோவாகவோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் இப்போதே ரொம்ப ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X