For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் சீசன் 6: அசீம் வெளியேவும் இப்படித்தான்... வெளியானது வீடியோ ஆதாரம்... வெளுத்தது சாயம்

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 சீரியல் நடிகர் அசீமும் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
  இவர் முதல் வாரத்தில் இருந்தே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ கண்டெண்ட்டாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

  சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவதும், ஒருமையில் பேசுவதும் வழக்கமாகி வருகிறது.

  தொடர்ச்சியாக இதுமாதிரியே விளையாடி வரும் அசீம் பலமுறை கமல் முன்னிலையிலும் கண்டிக்கப்பட்டுள்ளார்.

  நரம்பு புடைக்க கத்தி பேசுறீங்க ஷிவின்.. கமல் கொடுத்த நோஸ் கட்.. விக்ரமன், கதிருக்கு என்ன சொன்னார்? நரம்பு புடைக்க கத்தி பேசுறீங்க ஷிவின்.. கமல் கொடுத்த நோஸ் கட்.. விக்ரமன், கதிருக்கு என்ன சொன்னார்?

  சீன் கிரியேட்டர் அசீம்

  சீன் கிரியேட்டர் அசீம்

  21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, 84வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 12 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் டாஸ்க்கில் 9 பேர் மட்டுமே விளையாடினர். சீசன் 6ல் சீரியல் நடிகர் அசீமும் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். முதல் வாரத்தில் இருந்தே சக போட்டியாளர்களுடன் வார்த்தை அத்து மீறல்களில் ஈடுபட்டு வரும் அசீம், சில நேரங்களில் ஒருமையிலும் திட்டி வருகிறார். அதேபோல் தேவையில்லாத நேரங்களில் கூட பிரச்சினையை உருவாக்கி அதில் ஆதாயம் தேடி வருகிறார்.

  வெளியானது வீடியோ ஆதாரம்

  வெளியானது வீடியோ ஆதாரம்

  இரண்டாவது வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் ஆயிஷாவிடம் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டார் அசீம். அப்போது ஆயிஷாவுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்தார் விக்ரமன். அன்று முதல் அசீம் எல்லா போட்டியாளர்களிடமும் தேவையில்லாமல் சண்டையிடுவதும் ஒருமையில் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து கமல் அகம் டிவி வழியே பேசும் போது அசீமிடம் விளக்கம் கேட்டாலும், அவர் நான் எப்போதும் அப்படிக் கிடையாது சார், கண்டிப்பா என்னோட கோபத்தை கன்ட்ரோல் செய்ய ட்ரை பண்றேன், என் அறிவு கண்ணை திறந்துட்டீங்க என சமாளித்து வருகிறார். இந்நிலையில், இப்போது அசீம் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  சொந்த வாயால் சூனியம்

  சொந்த வாயால் சூனியம்

  அந்த வீடியோவில் கிச்சன் ஏரியாவில் காய்கறி கட் செய்தபடி மணிகண்டன், மைனா, கதிர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அசீம். அப்போது "எங்க லாரி டிரைவர் சரக்கு எடுத்துட்டு போகும் போது எதாவது லேட் ஆகிட்டாங்க, சரியான நேரத்துல பேக்டரிக்கு சரக்கு கொண்டு போக முடியல அப்படின்னா அப்போ வாங்குவானுங்க பாரு திட்டு. அப்போது உங்க திட்டுக்காகவே லாரிய வேகமா ஓட்டிட்டு போறோம்ன்னு சொல்வாங்க." தொடர்ந்து பேசும் அவர் டிரைவர்களை ஒருமையில் எதோ தகாத வார்த்தைகள் பயன்படுத்தி திட்டுவதாக தெரிகிறது. இதை பெருமையாக பேசும் அசீம், இந்த திட்டுக்கெல்லாம் லாரி டிரைவர்கள் தெறிச்சிடுவானுங்க என புளங்காகிதம் அடைகிறார்.

  விளாசும் நெட்டிசன்கள்

  விளாசும் நெட்டிசன்கள்

  பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே அசீம் இப்படி பேசிய வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும், "உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் டிரைவர்களை அசீம் குடும்பத்தினர் எந்த மாதிரி மோசமாக நடத்துகிறார்கள் என்பதை கோமாளி அசீம் அவருடைய வாயால் கூறி இருக்கிறார். இது பெருமை இல்லை, ரொம்பவே தவறான செயல்" என கருத்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அசீம் நடந்துகொண்ட விதம் பற்றி பிக் பாஸ் வீட்டில் பஞ்சாயத்து வரும் போதெல்லாம், இனி நான் அப்படி நடக்கவே மாட்டேன் என சத்தியமிடும் அசீம், வெளியேவும் அப்படித்தான் என்பதை அவராகவே ஒப்புக்கொண்டுள்ளார். மற்றவர்களை டிரிக்கர் செய்து பிக் பாஸ் வீட்டில் அராஜகமாக விளையாடி வரும் அசீமை, நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  English summary
  Bigg Boss Season 6 has reached its finale. In this, A video of Azeem confessing his mistake in the Bigg Boss house is trending now.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X